இணையத்தில் அதிகமாக உலவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஃபயர்பாக்ஸ் நீட்சி  இது. (Firefox Browser add-on). 
எனக்கு மிகவும் பிடித்த பயன்பாடு - முடிவில்லா பக்கம் ("Endless Page").  நீங்கள் ஒரு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், முதல் பக்கம் படித்து முடிக்கும் முன்,  தானாகவே அடுத்த பக்கத்தைத் தரவிறக்கி வைத்திருக்கும்.  அதே போல், Google, yahoo போன்ற தேடுப்பொறிகளில் தேடிடும் பொழுதும், தானாகவே அடுத்தடுத்த பக்கங்களைத் தரவிறக்கம் செய்து தயாராக வைத்திருக்கும். 


இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்திட, https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825

“Related Article” -  சில நேரங்களில், நாம் இணைய பக்கங்களில் புதிய தகவல்களைப் படித்திடும் போது, அதைப் பற்றி மேலும் அறிய, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள விளைவோம். அதை எளிதாக்குகிறது, இந்த நீட்சி.  ஒரு வார்த்தையைத் தெரிவு (select) செய்த உடன், அதன் மேல், ஒரு பலூன் (Popup Ballon) தோன்றும், அதில் “Google Search", "Wikipedia Search", "Twitter Search" போன்ற அம்சங்கள் இருக்கும்.மேலும், வார்த்தைகளைத் தெரிவு செய்தவுடன், தானாகவே “Copy" ஆகிவிடும். (காப்பி & பேஸ்ட் பதிவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.)

மேலும், Googleலில் தேடிடும் பொழுதும், தேடும் சொல்லிற்குச் சம்பந்தப்பட்ட நிறைய பக்கங்களை ”Amazon, Twitter" போன்ற இணைய தளங்களில் இருந்து, எடுத்துத் தருகிறது. 
Awesome Toolbar” - இந்த வசதி, Google Chrome-ல் இருப்பது போல, நாம் Address bar-ல் type செய்ய ஆரம்பித்தவுடன், நாம் அடிக்கடி செல்லும் தளங்களைப் பட்டியலிடும்.


Ctrl + Space - தட்டினால் Quick launcher என்ற வசதி வருகிறது.அதிகம் பயன்படுத்தும் தளங்களை அதில் பட்டியலிட்டுக் கொண்டால், Cellphone-ல் Quick dial வசதி இருப்பது போல, ஒரே சொடுக்கில் நமக்கு விருப்பமான தளத்திற்குச் செல்லலாம்.  


நாம் பார்வையிடும் இணைய தள பக்கத்தில் உள்ள எல்லா சுட்டிகளையும், எல்லா படங்களையும் ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யும் வசதியும் இதில் உள்ளது. 

இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்ய, இங்கே செல்லவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825

6 Comment(s)

 1. Anonymous // 3/27/2010 02:37:00 AM  

  ம்...

 2. அன்புடன் அருணா // 3/27/2010 03:57:00 PM  

  Firefox 3.6 download செய்தவுடன் roboform toolbar காணாமல் போய்விட்டது....மறுபடியும் வரவைக்க என்ன செய்வது???pls help.

 3. ஜீனோ கார்த்திக் // 3/27/2010 11:27:00 PM  

  roboform website முகப்பு பக்கத்தில் இருக்கும் exe- கொண்டு நிறுவி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.(?)

  அப்படி நிறுவிடும் போது, ஃபயர்பாக்ஸ் 3.0-3.5 வரை மட்டுமே support செய்யும்.

  ஃபயர்பாக்ஸ் 3.6ல் வேலை செய்ய, கீழுள்ள சுட்டியில் இருந்து, xpi format-ல் தரவிறக்கி, ஃபயர்பாக்ஸில் இருந்து நேரடியாகவே நிறுவ முடியும்.

  Roboform.xpi

  (open it using firefox browser)

  ஆனால், அதில் ஏற்கனவே பதிந்துள்ள கடவு சொல்(password) காணாமல் போயிருக்கும் என்று நினைக்கிறேன். (I haven't tried like this. Just try it. I think, it may be successful)

 4. ஜீனோ கார்த்திக் // 3/27/2010 11:34:00 PM  

  வாங்க அருணா, பல நாட்கள் பதிவுலகு பக்கமே நான் வரவில்லை. சென்ற வாரம் தான், உங்கள் வலைப்பூ முழுவதையும் படித்தேன். மிகவும் அருமை.

  பகிரப்படாத அன்பென்பது...........” மிகவும் பாதித்தது. அங்கே கருத்து வெளியிடலாம் என்று நினைத்தேன். ஆனால், ஆகஸ்டில் இட்ட பதிவு என்பதால், அப்படியே விட்டு விட்டேன்.

  வருகைக்கு நன்றி.

 5. எஸ்.கே // 8/22/2010 01:36:00 PM  

  உங்கள் பதிவு மிக நன்றாக உள்ளது!

 6. Anonymous // 11/01/2010 03:00:00 PM  

  நெட்புக் என்றால் என்ன?அதன் உபயோகம் என்ன?அதை வாங்கும்போது கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன?சென்னையில் எவ்வளவு விலை முதல் கிடைக்கும்?இது பற்றிய தகவல்களை வழங்கமுடியுமா?

CO.CC:Free Domain