கணினி வைரஸ், ட்ரோஜன் போன்றவைகளால் பாதிக்கப்படும் போது,  கணினியின் இயங்கு தளத்தை (operating system) மறுமுறை நிறுவ (install) வேண்டியதிருக்கும். 

கணினி வைத்திருப்போர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களில், Windows XP நிறுவும் முறையும் ஒன்று.   தெரியாதவர்கள் முந்தய பதிவைப்  படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  பலருக்கும் Windows XP நிறுவும் வழிமுறை  தெரிந்திருக்கும்.  இருப்பினும், கணினியை  பார்மட் (format) செய்து மறுமுறை நிறுவும் போது,  தகவல்கள் அழிந்து விடுமோ,  கணினி செயலிழந்து போய் விடுமோ என்ற பயம் இருக்கும். 

கணினி வைத்திருப்போருக்கும்,  ஹார்ட்வேர் தொழிலில் இருக்கும் புதியவர்களுக்கும் "Windows XP setup Simulator" என்ற அருமையான,  பயனுள்ள மென்பொருள் உள்ளது.   ஒரு கணினியை பார்மட் செய்து, windows xp-ஐ நிறுவும் போது எப்படி கணினி செயல்படுமோ,  அதே அமைப்பை இந்த மென்பொருள் ஏற்படுத்தித் தரும்.  ஆகையால், எந்த வித பயமும் இன்றி, நீங்கள் நன்றாக பயிற்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும்  விண்டோஸை நிறுவுலாம், நீக்கலாம்.
 
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய, http://getitfreely.co.cc/xp செல்லவும்.

குறிப்பு:  ESC கீயைத் தட்டி எப்போது வேண்டுமானாலும்,  இந்த மென்பொருளில் இருந்து வெளியேறலாம்.  இதனால் கணினிக்கு எந்த பாதிப்பும் வராது.

3 Comment(s)

  1. Anonymous // 3/09/2009 03:01:00 PM  

    அய்யா xp வேண்டாம் linux பற்றி எழுதுங்க சுதந்திர காத்தை சுவாசிக்க வைங்க

  2. ஜீனோ கார்த்திக் // 3/28/2009 04:24:00 PM  

    கூடிய விரைவில் உபுண்டு பற்றித் தமிழில் எழுத அரம்பித்துவிடுவேன், நண்பரே.

  3. Vijay // 3/28/2009 11:02:00 PM  

    நன்றி நண்பரே, ஒரு உபரி தகவல். பச்சை நிற குடுவை, இல்லையெனில் செட்ட்ங்ஸ் உள் சென்றால் “லாப்” கிடைக்கும்.

CO.CC:Free Domain