இணைய உபயோகிப்பாளர்கள்/ பதிவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை வலைப்பூவில்(blog), இணைய கருத்தரங்குகளில் (Forum) தருகின்றனர்.  ஆனால், இதில் என்ன பிரச்சனை என்றால், விசமிகளால் இயக்கப்படும் "Robot" எனப்படும் தானியங்கி ஸ்கிரிப்ட்கள் உங்கள் வலைத்தளத்தை / வலைப்பூவைப் படித்து,அதில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை மட்டும், பிரித்து எடுத்து சேமித்து வைத்திடும்.  பின் தேவையில்லா குப்பை மின்னஞ்சல்கள் (Spam message) அனுப்பப் பயன்படுத்துகின்றனர்.  இதை spamming என்பார்கள். இதை தடுத்திட எளிய வழிகள் உள்ளன.

வலைப்பூவிலோ, வலைத்தளத்திலோ மின்னஞ்சல் முகவரியை, படமாக மாற்றி வெளியடலாம்.  இதை Robot-களால் படிக்க இயலாது.
உங்கள் முகவரியை எளிதாக படமாக மாற்றிட, இந்த தளத்திற்குச் செல்லவும். http://services.nexodyne.com/email/
 படங்களாக உள்ளீடு செய்ய முடியாத இடங்களில்,  உங்கள் முகவரியை  example (at) gmail (dot) com போன்று பிரித்தும் கொடுக்கலாம்.

இப்படி கொடுப்பதால்,  விஷமிகளிடமிருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரியையும்,  உங்களையும் காத்திடலாம். 

ஜிமெயிலில் ஸ்பேமில் இருந்து தப்பிக்க ஒரு எளிய வழியுள்ளது. ஜிமெயில் பயனர்கள் அதை பற்றிப் படிக்க இங்கே செல்லவும்.

3 Comment(s)

  1. அசோசியேட் // 2/28/2009 11:55:00 AM  

    எல்லோருக்கும் பயனுள்ள குறிப்புகள் !

  2. Anonymous // 3/01/2009 12:32:00 AM  

    nice

  3. THANGAMANI // 6/09/2009 02:37:00 PM  

    VERY USEFUL POST.THANK YOU.

CO.CC:Free Domain