உங்கள் அலுவலகத்தில் இண்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளதா? உங்கள் அலுவலக் கணினியில் Ms Outlook / Outlook Express / Thuderbird, மூலம் மெயில் மட்டும் தான் செக் செய்ய முடியுமா?    இனி கவலை வேண்டாம், மெயில் மூலமாகவே நீங்கள் இணைய தளங்களையும் உலாவிட முடியும். 

Rediff நிறுவனம், Web-in-Mail என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.  உங்கள் Outlook-லிருந்து, ”browse@webinmail.com” என்ற முகவரிக்கு, Subject-ல் நீங்கள் பார்வையிட நினைக்கும் தளத்தின் முகவரியை உள்ளீடு செய்து அனுப்பவும்.  ஓரிரு நிமிடங்களில், Web-in-mail அந்த தளத்தை உங்கள் mailbox-ற்கு அனுப்பி வைத்து விடும்.

உதாரணமாக, கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல, ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். பின் உங்களுக்கே புரியும். 
To: browse@webinmail.com
Content: left blankகூகிளில் தேடிட, Subject-இல் google:keyword என்று அனுப்பினால், ரிஸட்டை உங்கள் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள்.  அதே போல, கூகிள் இமேஜஸில் தேடிட, googleimg: keyword என்று கொடுக்க வேண்டும்.
மேலும், அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட தளங்களையும் பார்வையிட முடியும்.

4 Comment(s)

 1. dondu(#11168674346665545885) // 2/05/2009 11:00:00 AM  

  கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க. உங்களோட அறிவுரையை கேட்டு அதன்படி நடந்து எவ்வளவு பேருக்கு அலுவலகத்தில் சங்கோ? ஏன் இந்தக் கொலைவெறி? :))))))))

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. ஜீனோ கார்த்திக் // 2/05/2009 11:38:00 AM  

  வருக, டோண்டு ராகவன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ////கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க. உங்களோட அறிவுரையை கேட்டு அதன்படி நடந்து எவ்வளவு பேருக்கு அலுவலகத்தில் சங்கோ? ஏன் இந்தக் கொலைவெறி? :))))))))////

  code எழுத தெரியாத (என்னைய மாதிரி) மக்களுக்கு, நல்ல உபயோகமாக இருக்கும்னு நினைக்கிறேன்.

 3. யூர்கன் க்ருகியர் // 2/05/2009 12:05:00 PM  

  இப்படியுமா? அராவடிக்கு அளவே இல்லையா!
  கலக்கல் செய்தி! நன்றி

 4. ஷாஜி // 2/05/2009 02:52:00 PM  

  மிக்க நன்றி.. பயனுள்ள தகவல்

CO.CC:Free Domain