ஜிமெயில், "Undo Send" என்ற ஒரு புதிய வசதியை அளிக்கிறது. அதாவது, நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெயிலை,  மெயில் பெறுபவர் இன்பாக்ஸிக்குச் செல்லாமலேயே தடுத்திடலாம்.  

மெயில் "Compose" செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும்.  நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, "Your Message has been send, Undo" என்ற இணைப்பு வரும்.  மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.இந்த சேவையை பயன்படுத்த,  ஜிமெயிலில் உள்நுழைந்து, "Labs" பக்கத்திற்குச் சென்று,  "Undo Send" சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும்.  (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில்,  பயனர் பெயர், "Setting" இடையில்,  பச்சை  நிற குடுவை  ஒன்று இருக்கும்.  அதுவே, "Labs" பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.)

மின்னஞ்சல்,  பெறுநர் இன்பாக்ஸிக்குச் சென்றுவிட்டால்,  அதை  திரும்பப் பெற இயலாது. 

கணினி வைரஸ், ட்ரோஜன் போன்றவைகளால் பாதிக்கப்படும் போது,  கணினியின் இயங்கு தளத்தை (operating system) மறுமுறை நிறுவ (install) வேண்டியதிருக்கும். 

கணினி வைத்திருப்போர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களில், Windows XP நிறுவும் முறையும் ஒன்று.   தெரியாதவர்கள் முந்தய பதிவைப்  படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  பலருக்கும் Windows XP நிறுவும் வழிமுறை  தெரிந்திருக்கும்.  இருப்பினும், கணினியை  பார்மட் (format) செய்து மறுமுறை நிறுவும் போது,  தகவல்கள் அழிந்து விடுமோ,  கணினி செயலிழந்து போய் விடுமோ என்ற பயம் இருக்கும். 

கணினி வைத்திருப்போருக்கும்,  ஹார்ட்வேர் தொழிலில் இருக்கும் புதியவர்களுக்கும் "Windows XP setup Simulator" என்ற அருமையான,  பயனுள்ள மென்பொருள் உள்ளது.   ஒரு கணினியை பார்மட் செய்து, windows xp-ஐ நிறுவும் போது எப்படி கணினி செயல்படுமோ,  அதே அமைப்பை இந்த மென்பொருள் ஏற்படுத்தித் தரும்.  ஆகையால், எந்த வித பயமும் இன்றி, நீங்கள் நன்றாக பயிற்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும்  விண்டோஸை நிறுவுலாம், நீக்கலாம்.
 
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய, http://getitfreely.co.cc/xp செல்லவும்.

குறிப்பு:  ESC கீயைத் தட்டி எப்போது வேண்டுமானாலும்,  இந்த மென்பொருளில் இருந்து வெளியேறலாம்.  இதனால் கணினிக்கு எந்த பாதிப்பும் வராது.

இப்போது online shopping தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. Online shopping செய்யவில்லை என்றாலும், webhosting, domain name வாங்குவதற்கு போன்ற சில இணைய சேவைகளை பெற credit card அவசியமாக உள்ளது. கிரெடிட் கார்ட் எண் கேட்கும் எல்லா தளங்களிலும் உங்கள் தகவல்களை தந்து விட வேண்டாம்.

முதலில், அந்த தளத்தின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளுங்கள். "கிரெடிட் கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர் சாக்கெட்லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உள்ள கிரிடிட் கார்டு விவரங்களை அளிதால்,நீங்கள் ஏமாந்துபோகும் வாய்புகள் இருக்கின்றன.

SSL certificate பெற்றுள்ள வெப்ஸைட்டுகளின் "லாக் இன்" பேஜ் ஓப்பன் செய்யும்போது, பூட்டு போன்ற ஒரு ஐகான் (உலாவியில் கீழே இருக்கும் "status bar"-ல்) வரும். அதை க்ளிக் செய்தால் எஸ்.எஸ்.எல். சான்றிதழ் வாங்கியுள்ளார்களா என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த சான்றிதழ் யாருக்கு, யாரால் வழங்கப்படுகிறது, காலாவதியாகும் நாள் போன்ற தகவல்கள் அதில் இருக்கும்.

இவை இருந்தால், அந்த தளத்தில் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதே. இந்த தளங்களில் உள்ளிடப்படும் தகவல்கள் encrypt செய்யப்பட்டு இணையம் வழியாக அனுப்பப்படும். இதனால் அந்த தகவல்களை இடைமறித்துத் திருட முடியாது. அப்படியே மீறி எதேனும் தவறுகள் நடந்துவிட்டது என்றாலும், சம்மந்தப்பட்ட இணையதளத்தின் மீது உங்களால் வழக்குத் தொடர முடியும். பொதுவாக இணையதளத்தின் முகவரியை மட்டும் டைப் செய்து,என்டர் கொடுத்தால்,http:// என்று முகவரி தொடங்கும். எஸ்.எஸ்.எல். சான்றிதழ் பெற்றுள்ள இணையதளங்களில் http://யுடன் கூடுதலாக 's' இருக்கும் (https://). இதுவே பாதுகாப்பான இணையதளங்களைக் கண்டு பிடிக்க எளியவழி. இவை தவிர, மற்றவை ஏமாற்றும் தளங்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது!"
- முத்துப்பாண்டி, எம்.எம்.ஐ

இணைய உபயோகிப்பாளர்கள்/ பதிவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை வலைப்பூவில்(blog), இணைய கருத்தரங்குகளில் (Forum) தருகின்றனர்.  ஆனால், இதில் என்ன பிரச்சனை என்றால், விசமிகளால் இயக்கப்படும் "Robot" எனப்படும் தானியங்கி ஸ்கிரிப்ட்கள் உங்கள் வலைத்தளத்தை / வலைப்பூவைப் படித்து,அதில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை மட்டும், பிரித்து எடுத்து சேமித்து வைத்திடும்.  பின் தேவையில்லா குப்பை மின்னஞ்சல்கள் (Spam message) அனுப்பப் பயன்படுத்துகின்றனர்.  இதை spamming என்பார்கள். இதை தடுத்திட எளிய வழிகள் உள்ளன.

வலைப்பூவிலோ, வலைத்தளத்திலோ மின்னஞ்சல் முகவரியை, படமாக மாற்றி வெளியடலாம்.  இதை Robot-களால் படிக்க இயலாது.
உங்கள் முகவரியை எளிதாக படமாக மாற்றிட, இந்த தளத்திற்குச் செல்லவும். http://services.nexodyne.com/email/
 படங்களாக உள்ளீடு செய்ய முடியாத இடங்களில்,  உங்கள் முகவரியை  example (at) gmail (dot) com போன்று பிரித்தும் கொடுக்கலாம்.

இப்படி கொடுப்பதால்,  விஷமிகளிடமிருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரியையும்,  உங்களையும் காத்திடலாம். 

ஜிமெயிலில் ஸ்பேமில் இருந்து தப்பிக்க ஒரு எளிய வழியுள்ளது. ஜிமெயில் பயனர்கள் அதை பற்றிப் படிக்க இங்கே செல்லவும்.

நமது செயல்களை நண்பர்களுக்கு அறிவிப்பதற்காக Twitter.com-ன் இணைய சேவை பயன்படுகிறது.  பலரும், Twitter.com இணையதளம் சென்றே அப்டேட் செய்கிறார்கள்.  அதை விட பல எளிய வழிகள் உள்ளன.  அதை இங்கே பார்ப்போம்.

இந்த  இணைய தளத்தின் தளஓடையை (RSS Feed) அப்டேட் செய்ய twitterfeed.com என்ற இணைய தளம் தரும் சேவையை  பயன்படுத்துகிறேன்.  கீழே இதைப் போன்று சேவை  தரும் வேறு ஐம்பது தளத்தின் முகவரி கொடுத்துள்ளேன்.

தரம்(Rank) இணைய தள சேவைகள் பயனர்கள் Tweets/பயனர்
1 (1) web 32.09 % 4.54
2 (2) TweetDeck 11.81 % 5.90
3 (6) Tweetie 4.84 % 2.40
4 (3) twitterfeed 4.56 % 2.96
5 (4) twhirl 4.56 % 2.96
6 (7) txt 4.47 % 2.25
7 (5) twitterrific 3.26 % 1.77
8 (10) TwitterFon 3.07 % 2.30
9 (11) TwitterBerry 2.88 % 2.39
10 (9) mobile web 2.42 % 2.62
11 (8) TwitPic 2.33 % 1.36
12 (16) Brightkite 2.14 % 1.48
13 (14) FriendFeed 2.05 % 4.45
14 (12) Ping.fm 1.95 % 1.48
15 (13) TwitterFox 1.95 % 2.05
16 (17) Power Twitter 1.49 % 5.75
17 (19) Twitstat Mobile 0.74 % 3.12
18 (20) Blip.fm 0.74 % 2.38
19 (15) Mobypicture 0.65 % 1.43
20 (21) Twittelator 0.65 % 1.43
21 (62) ninjatweet 0.56 % 7.67
22 (33) EventBox 0.37 % 1.75
23 (18) m.slandr.net 0.37 % 3.50
24 (66) TwitterHawk 0.37 % 1.00
25 (43) TwitKit 0.28 % 1.33
26 (24) Twinkle 0.28 % 1.00
27 (30) Tweetburner 0.28 % 1.33
28 (51) SocialScope 0.28 % 1.67
29 (38) DestroyTwitter 0.28 % 1.67
30 (22) twibble 0.28 % 4.33
31 (29) TinyTwitter 0.19 % 5.00
32 (35) TweetGrid 0.19 % 4.50
33 (55) Tumblr 0.19 % 2.00
34 (25) Identica 0.19 % 1.50
35 (105) Socialbrowse 0.19 % 1.00
36 (34) dabr 0.19 % 5.50
37 (40) twitthat 0.19 % 1.00
38 (107) Perl Net::Twitter 0.19 % 16.50
39 (41) twidroid 0.19 % 2.00
40 (77) PockeTwit 0.19 % 6.50
41 (39) HelloTxt 0.19 % 2.00
42 (96) NatsuLiphone 0.19 % 4.00
43 (28) iTweet 0.19 % 1.50
44 (48) foxytunes 0.19 % 1.00
45 (58) BeTwittered 0.19 % 2.00
46 (61) Tweetree 0.19 % 2.00
47 (54) Ubiquity 0.19 % 2.00
48 (42) Twitter Grader 0.19 % 3.50
49 (27) TwitterBar 0.19 % 2.00
50 (68) Mobile Tweete 0.09 % 2.00


மறக்காமல், உங்களுக்குப் பிடித்த  இணைய தள சேவையை இங்கே குறிப்பிடவும்.  எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Indioss.com - ஐ Twitter-ல் தொடர இங்கே செல்லவும்.

கீழே உள்ள படத்தைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

பில்கேட்ஸ் ஒரு டிசைன் பிரியர் போலும்.  100 சதவீதம் உறுதியாகக் கூறுகிறேன், இந்த மாதிரி டிசைனைப் பயர்பாக்ஸில் பண்ண முடியாது.  (ஏனெனில், பயர்பாக்ஸ் crash ஆவது அபூர்வமான ஒன்று).

இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகித்தால் கணினிக்கு ஆபத்து என்பது பலருக்கும் தெரிந்த ஒரு உண்மை. தெரியாதவர்கள் இந்த பதிவைப் படித்து தெரிந்துக் கொள்ளவும்.

ரியாக்ஷன் டைம் என்பது நீங்கள்  ஒரு செயலை/நிகழ்வை உணர்ந்து செயல்பட எடுக்கும் நேரமாகும்.  இதை கணக்கிட,  பிபிசி ஒரு பிளாஷ் கோப்பைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.  அதை என் வலைத் தளத்தில் ஏற்றியுள்ளேன்.   

உங்கள் ரியாக்ஸன் டைமை  அறிந்து கொள்ள இங்கே செல்லவும்


எமோட்டிகான்கள் நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.  இவை தொடர் எழுத்துக்கள் / குறியீடுகளால் ஆனது. பெரும்பாலும் மின்னஞ்சல், குறுந்தகவல், மின் அரட்டை (இப்போ,  வலைப்பூவில் கருத்துரைகள் இடவும் கூட) இதை  பயன்படுத்துகின்றனர்.  கீழே பல்வேறு, குறியீடுகளும் அதற்கான விளக்கமும்.


பெரும்பாலும் உபயோகிக்கப்படும், :-) குறியீடு சிரிப்பு, சந்தோஷம் ஆகியவரற்றைக் குறிக்கிறது.  :-( --சோகத்தைக் குறிக்கிறது.  :'( - அழுகை.  மேலும் பல எமோட்டிக்கான்களின் அர்த்தம்,  ஆங்கிலத்தில்.


O:)
:D
:-D
:]
:-X
:-C
=^..^=
*:o)
:'(
:-)'
}:>
:-7
:->
:*
:-9
:-#
:-{
@}-;-'--
:(
:<
:O
:)
8-)
:-)
:>
:-|
:p
:-&
:-\
;)
:-*
Angel
Big Grin
Big Grin
blockhead
Bow Tie
Bummer
Cat
Clown
Crying
Drooling
Evil
Half Grin
Happy
Kiss
Licking Lips
Lips are sealed.
Mustache
Rose
Sad
sad
shocked
Smiley
Smile Smile Smiley
Smiley
Smiley
So What
sticking tongue out at you!
Tongue-Tied
Undecided
Wink
YuckIcon Meaning Icon Meaning Icon Meaning
(^_^)
smile
(^o^)
laughing out loud
d(^_^)b
thumbs up (not ears)
(T_T)
sad (crying face)
(-.-)Zzz
sleeping
(Z.Z)
sleepy person
\(^_^)/
cheers, "Hurrah!"
(*^^*)
shyness
(-_-);
sweating (as in ashamed)
*3*
"Surprise !."
(?_?)
"Nonsense, I don't know."
(^_~)
wink
(o.O)
confused
(<.<)
shifty, suspicious
v(^_^)v
victory

உலகத்தில் பல லட்சக்கணக்கான இணைய தளங்கள் உள்ளன. அதில் நம் வலைத்தளம் / வலைப்பூ (website/blog) எந்த  rank-ல் இருக்கிறது என்று அறிந்து கொள்ள Alexa உதவுகிறது.   வலைத்தளத்திற்கு வருவோர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே  Rank கொடுக்கிறார்கள்.  மேலும், நமது வலைப்பூவிற்குச் சராசரியாக எத்தனை பேர் வருகிறார்கள், எத்தனை பக்கம் பார்வை இடுகிறார்கள்,  யாரெல்லாம் உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பு கொடுத்துள்ளார்கள் போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.  இந்த தகவல்களை 1 வாரம், 1 மாதம், 6 மாதம், 1 வருடம் எனப் பிரித்து அட்டவணையாக  தருவது  சிறப்பு.

உங்கள் வலைப்பூவின் Rank அறிந்து கொள்ள, இங்கே செல்லவும்.


Tamilish.com-ன் Daily reach அட்டவணை.


http://indioss.com ரேங்க் பதிக்கப்பட்ட டி-சார்ட்டுன் குட்டி.

”வலைத்தளத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை “Alexa Toolbar" பயனர்களின் பயன்பாடு கொண்டு தீர்மானிக்கிறோம்” என்று alexa தரப்பில் இருந்து கூறுகின்றனர். 


உங்கள் வலைத்தளம் / வலைப்பூவின் rank-ஐ இங்கே  பகிரவும். 

நேற்று ஒருவர் வீட்டிற்குக் கணினி பழுது நீக்க(hardware service) சென்றிருந்தேன். அப்போது அவர் அவருடைய கணினி மிகவும் மெதுவாக இயங்குகிறது எனக் குறை கூறினார்.  அவர் கணினி "Add/Remove Program"-ஐ பார்க்கும் போது தான் தெரிந்தது, ஒரே வேலையை செய்யும் பல்வேறு மென்பொருட்களை நிறுவி இருந்தார்.  முக்கியமாக, DVD player, AVI Player, DIVX player, MP4 player, MKV player என வரிசையாக 15 மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து நிறுவியிருந்தார்.
மென்பொருட்களை நிறுவாமலேயே, எல்லா வகைக் கோப்புகளையும் பார்ப்பது எப்படி என்று அவருக்கு விளக்கமாக கூறினேன்.  அந்த விளக்கம் உங்களுக்காக........
ஒவ்வொரு format-இற்கும், கோப்புகளின் வீடியோ தரம் குறையாமல், கொள்ளளவு மட்டும் குறைப்பதற்குத் தனி algorithm உபயோகிப்பர். அதையே Codec என்போம்.  ஒவ்வொரு வித video format-க்கும் ஒவ்வொரு player நிறுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்குப் பதில், அதன் codec-ஐ மட்டும் நமது கணினியில் நிறுவினால் போதும், மேலே கூறிய அனைத்து வகை கோப்புகளும் "Windows Media Player"-இலேயே பார்க்கலாம். “Windows® Essencials Codec Pack” என்ற codec pack-ஐ நிறுவினால், போதும்.  அனைத்து வகை கோப்புகளும், உங்கள் “Windows Media Player"-இலேயே பார்க்கலாம்.மேலும் இது மொத்தமே 6mb தான்.
Windows® Essencials Codec Pack தரவிறக்கம் செய்திட, இங்கே செல்லவும்.


Windows Media Player-ல் MKV கோப்புகளும், flv கோப்புகளும்  மட்டும் play ஆகாது, "Media Player Classic" என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். 
WECP support செய்யும் அனைத்து வீடியோ format-களும்.
WECP is designed as a near complete solution for all your video and audio needs, with it you can play Audio CDs, DVDs, (S)VCDs and XCDs on the fly, and it adds support for 3GP, AAC, AC3, APE, AVI, DivX, 3ivx, DAT, h.264, x264, AVC, Nero Digital, DTS, FLV, FLAC, HD-MOV, MPEG-1, MPEG-2, M4A, MPC, MP3, MP4, MO3, MOD, MKV/MKA, MTM, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, VOB, WavPack, ATRAC3, XviD, XM, WV, UMX and many more formats so you could play any video / audio file with your favorite media player or with the free and wonderful Media Player Classic player that comes included with WECP

நான் சென்னை சைதாப்பேட்டையில் ”Hardware service engineer"- ஆக இருக்கிறேன்.   உங்கள் கணினி பழுது நீக்க, மென்பொருள் நிறுவ, Hardware service செய்ய, அழையுங்கள் 9789008755.  மேலும், கணினி சம்பந்தப்பட்ட எந்த வித சந்தேகத்திற்கும் தொடர்பு கொள்ளுங்கள்.  என் மின்முகவரி, blog@dearbabu.co.cc.

அடிக்கடி புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம், தற்போது ”கூகிள் மொபைல் (இந்தியா )என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் நீங்கள் உங்கள் மொபைலில் இருந்தே, கூகிளில் தேடிடலாம். அது மட்டுமல்லாது, கீழே குறிப்பிட்ட அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம். 
Get cricket scores, Indian Railways train schedules &  ticket status, horoscopes, movie showtimes, restaurant information and more ...all through SMS on your phone.

இந்த சேவையைப் பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் கேள்விகளை 9-77-33-00000 என்ற நம்பருக்கு sms அனுப்ப வேண்டும்.  கூகிள் உங்களுக்குப் பதில் sms அனுப்பும்.  SMS அனுப்புவதற்கான கட்டணம் மட்டுமே. (உங்கள் plan-ல் sms இலவசமாக இருந்தால் மிக்க நன்று). SMS பெறுவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது.
 SMS கோட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஸ்கோர் அறிந்து கொள்ள:  cricket / cri / cricket score

Train schedule பார்க்க -  trains delhi to mumbai
Train PNR status பற்றி தெரிந்து கொள்ள: pnr number
படங்களைப் பற்றி தெரிந்து கொள்ள்:  movie, chennai 
மேலும் விபரங்களை அறிந்து கொள்ள, இங்கே செல்லவும்.

உங்கள் அலுவலகத்தில் இண்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளதா? உங்கள் அலுவலக் கணினியில் Ms Outlook / Outlook Express / Thuderbird, மூலம் மெயில் மட்டும் தான் செக் செய்ய முடியுமா?    இனி கவலை வேண்டாம், மெயில் மூலமாகவே நீங்கள் இணைய தளங்களையும் உலாவிட முடியும். 

Rediff நிறுவனம், Web-in-Mail என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.  உங்கள் Outlook-லிருந்து, ”browse@webinmail.com” என்ற முகவரிக்கு, Subject-ல் நீங்கள் பார்வையிட நினைக்கும் தளத்தின் முகவரியை உள்ளீடு செய்து அனுப்பவும்.  ஓரிரு நிமிடங்களில், Web-in-mail அந்த தளத்தை உங்கள் mailbox-ற்கு அனுப்பி வைத்து விடும்.

உதாரணமாக, கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல, ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். பின் உங்களுக்கே புரியும். 
To: browse@webinmail.com
Content: left blankகூகிளில் தேடிட, Subject-இல் google:keyword என்று அனுப்பினால், ரிஸட்டை உங்கள் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள்.  அதே போல, கூகிள் இமேஜஸில் தேடிட, googleimg: keyword என்று கொடுக்க வேண்டும்.
மேலும், அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட தளங்களையும் பார்வையிட முடியும்.

இனி மென்புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லை.   உங்கள் புத்தகங்களை mp3-ஆக மாற்றுங்கள், பின் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.  "Text-to-Speech" converter-ஐ பற்றிப் பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள்.  அது போலவே, spokentext.net என்பது "Text-to-mp3" converter ஆகும்(இணையதள சேவை ஆகும்).

 தள முகவரி:  http://spokentext.net
http://spokentext.net/ - எல்லா வகை எழுத்துக் கோப்புகளையும் (PDF, Word, plain text, PowerPoint, RSS feeds, emails, web pages, etc)  audio கோப்புகளாக மாற்றிக்கொள்ளலாம்.  mp3 ஆகவும், ஐ-பாட்களுக்கேற்ற கோப்புகளாகவும் மாற்றிக் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மேலும்,  youtube videoகளைப் பிளாக்கில் பொதிவது போல, இந்த mp3 கோப்புகளையும் உங்கள் பிளாக்கில் பொதிந்து, தள வாசகர்களுடன், பகிர்ந்து கொள்ளலாம். 


தகவல் அதிகமாக இருக்கும் சில தளங்களில் கூட தேடுதல் வசதி இருப்பதில்லை. அப்படிப்பட்ட தளங்களில், கூகிள் உபயோகித்துத் தேடுவது எப்படி என்று பார்ப்போம்.
கூகிளில் தேடு சொல் மட்டும் கொடுத்தால்,  எல்லா இணையத் தளத்திலும் தேடி பதில் தரும்.  குறிப்பிட்ட ஒரு தளத்தில் இருந்து மட்டும்  முடிவு வேண்டும் என்றால்,  கூகிளில் உள்ளிடும் போது, தேடு சொல்லைத் தொடர்ந்து, +site:http://www.sitename.com என கொடுக்கவும்.
கூகிளில் கொடுக்க வேண்டிய Format:  
keyword +site:http://www.sitename.com

keyword - தேடு சொல்.
http://www.sitename.com என்பது எந்த தளத்தில் தேட வேண்டுமோ, அந்த தள முகவரி.

(ஜிமெயில் என்று இந்த தளத்தில் தேடிட, இவ்வாறு கொடுக்க வேண்டும்!)


என் நண்பன் ஒருவன் புதிய mobile ஒன்று வாங்கினான்.  அவனிடம் இருந்த பழைய மொபலை (Motorola C980) விற்பது என்று முடிவு செய்தோம்.  இங்கு (சென்னை) ரிச்சி ஸ்ரிட்டில் பல கடைகளில் கேட்டுப் பார்த்தோம். “Motorola மொபைல் எல்லாம் நல்ல ரேட்டுக்குப் போகாது தம்பி” என்று கூறி, மிகவும் மலிவான விலைக்குக் கேட்டனர்.  நல்ல விலைக்குப் போகாததால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். பின், இணையத்தில் இதைப் பற்றித் தேடி கொண்டிருந்த போது, “ContactHello.com" இணைய தளம் கிடைத்தது.  அதில், விளம்பரம் கொடுத்தோம்.  பத்தே நாட்களில் விற்று விட்டது.  அதுவும் நல்ல விலைக்கு.  உங்களிடம் பழைய mobile phone இருந்தால், முயற்சி செய்து பாருங்களேன்.
இது ஒரு இந்தியத் தளம். second Hand mobile phone-களுக்கென்றே பிரத்யோகமாக ஏற்படுத்தப்பட்ட இணைய தளம். உங்களிடம் பழைய mobile phone இருந்தால், முயற்சி செய்து பாருங்களேன். உங்கள் அனுபவத்தையும், பின்னூட்டம் மூலம் பகிர்ந்துக் கொள்ளவும்.தள முகவரி: http://www.contacthello.com/mobile/
உங்கள் விளம்பரம் இட: http://www.contacthello.com/mobile/postad.html

Youtube தான் உலகின் மிக பெரிய வீடியோ இணையதளம்.  இதில் இல்லாத பாடல்களே இல்லை எனலாம்.  முந்தைய பதிவில், Youtube-லிருந்து எப்படி mp4 ஆக தரவிறக்கம் செய்வது பற்றிப் பார்த்தோம்.  இந்த பதிவில், எப்படி mp3-ஆக தரவிறக்கம் செய்வது பற்றிப் பார்ப்போம்.  அதாவது, வீடியோ காட்சி இல்லாமல், பாடல் ஒலியை மட்டும் பிரித்தெடுத்துத் தரவிறக்கம் செய்திடலாம்.  இதனால், நேரமும், bandwidth-ம் மிச்சம்.

கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்குச் சென்று, அதில் எந்த வீடியோவின் ஒலியைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமோ, அதன் முகவரியைத் தரவும்.
உதாரணத்திற்கு,  http://in.youtube.com/watch?v=L4HSg8nM-sU, இந்த பாடலின் ஒலியைத் தரவிறக்கம் செய்திட,  http://www.youtube.com/watch?v=L4HSg8nM-sU என உள்ளிடவும்.  அதாவது, முதலில் இருக்கும் "http://in"-ஐ "http://www" என மாற்றி உள்ளிட்டு, ”Go"ஐ சொடுக்கினால், சிறிது நேரத்தில், download link கிடைத்து விடும். 

இன்று காலை இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது, இந்த புத்தகம் கிடைத்தது. ஒரு கணினியில் Format செய்து, Windows XP-ஐ நிறுவது எப்படி என்பது குறித்து, படங்களுடன் எளிய தமிழில் உள்ளது. 

நம்மில் பலருக்கும் Win XP நிறுவுதல் தெரிந்திருக்கும், இருப்பினும் சில குழப்பங்களும் இருக்கும். அதனைப் பற்றிய எளிய விளக்கமே இப்புத்தகம்.

தரவிறக்கம் செய்திட, இங்கே சொடுக்குங்கள்.

*** இந்த புத்தகத்தைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை.

பொதுவாக youtube-ல் இருந்து .flv கோப்புகளாக தான் தரவிறக்கம் செய்ய முடியும்.  இந்த கோப்பு வகைகளை mp4 ipod-களில் காணயிலாது. எதாவது வீடியோ கண்வர்டரை கொண்டு மாற்ற வேண்டியதிருக்கும்.  அப்படியில்லாமல், உங்கள் ஃபயர்பாகஸ் உலாவியில் இருந்து கொண்டே,  youtube-ல் இருந்து நேரடியாக mp4 கோப்புகளாக தரவிறக்கம் செய்திடலாம். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை (Get Youtube Video) அப்படியே இழுத்துக் கொண்டு,  ஃபயர்பாகஸில் இருக்கும் ”Bookmark Toolbar"-ல் வைத்து விடவும்.  இனி நீங்கள் youtube இணைய தளத்தில்  வீடியோகளைக் காணும் போது, இந்த லிங்கைச் சொடிக்கி தரவிறக்கம் செய்திடுங்கள்.


Get Youtube Video


பொதுவாக இணையம் உபயோகிக்கும் அனைவரும் ரேப்பிட்ஷேர்  இணைய தளத்தை உபயோகித்திருப்போம்.  அதில் இலவசப் பயனர் கணக்கைத் தேர்வு செய்தோமேயானால், 50 - 60 விநாடிகள் வரை காக்க வைத்து நேரம் விரையம் செய்வார்கள்.  அப்படியில்லாமல், ரேப்பிட்ஷேரில் இருந்து உடனே தரவிறக்கம் செய்ய ஒரு எளிய வழி உள்ளது.
ஃபயர்பாக்ஸ் பயனர்கள், கீழே உள்ள லிங்கை (Indioss)அப்படியே இழுத்துக் கொண்டு,  ”Bookmark Toolbar"-ல் வைத்து விடவும்.   ரேப்பிட்ஷேரில் கவுண்ட் டவுன் டைமர் ஓடும் போது, இந்த லிங்கைச் சொடிக்கினால், உடனே, டவுன்லோட் லிங்க் கிடைத்து விடும்.

Indioss

இண்டர்நெட் பயனர்கள், மேலே உள்ள லிங்கை (Indioss) ரைட் கிளிக் செய்து “Add to Favorite" என்பதைத் தேர்வு செய்யவும். பின், ரேப்பிட் சேரில் கவுண்ட் டவுன் டைமர் ஓடும் போது, ”Favorite"-ல் சென்று இந்த லிங்கைச் சொடிக்கினால், உடனே, டவுன்லோட் லிங்க் கிடைத்து விடும்.

தமிழா.... தமிழா.....

By: ஜீனோ கார்த்திக் | 1/03/2009 02:56:00 AM | 2 Comment(s) »

சந்தோஷத்தின் உச்சம் எதுவோ அதையும் தாண்டி வளர்ந்திருக்கிறேன். நடந்தது கனவா நினைவா? தெரியவில்லை. வாழ்கையில் இரண்டாவது முறையாக மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். என் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தவரை முதன்முறையாகச் சந்தித்தேன்.
எப்படி ஒரு பூனை ஒரு கடலைக் குடித்து விட முடியாதோ அது போலத் தான், அந்த மாமனிதரின் பெருமையின் ஒரு பாகத்தைக் கூட முழுமையாக என்னால் எடுத்துரைக்க இயலாது. இருப்பினும் என் பார்வையில் இருந்து அவரைப் பற்றிக் கூற முயற்சி செய்கிறேன்.
என் விடலைப் பருவத்தில் உலகை முதன்முறையாக(!) பார்த்த போது, இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொடுத்தவர், உலகை நேசிக்க கற்றுத்தந்தவர். தமிழை நேசிப்பவர். தமிழை நேசிக்க வைத்தவர். மண்ணுக்குள் புதைந்து வரும் மனிதத்தை அப்படியே விட்டு விடாமல், தன் கவிதைகளில் ஏற்றி மனித மனங்களில் விதைத்தவர். தேசப்பற்றை ரத்ததிலே பாயச்செய்தவர்.


’சிலரின்’ காதலைப்(?) பார்த்து “..சீ, இதுவா காதல்”, என்று நொந்த போது, ”காதல் எதுவென்று” விளங்கச் செய்தவர். நட்பின் ஆழம் வரை கூட்டிச் சென்றவர்.

நான் கண்ணீர் சிந்தும் போது கைக்குட்டை ஆனவர். சோகத்தின் போது மருந்தானவர். சந்தோஷத்தை இரட்டிப்பு ஆக்குபவர். சின்னச் சின்ன தோல்விகளைச் சந்தித்த போது தோள் கொடுத்துத் தூக்கி விட்டவர். அன்றாட வேலைகளில் மூழ்கி என் முகவரியைத் தொலைத்திருந்த வேளையிலே, என்னை எனக்கு அடையாளம் காட்டியவர். நாட்டின் கடைநிலை மாந்தரின் வாழ்க்கைக் கூட காவியமாக்கியவர். வாழ்க்கையை முன்னோக்கியும் கொஞ்சம் பின்னோக்கியும் பார்க்கக் கற்றுத் தந்தவர். அவரின் பேனாவால் என்னைச் செதுக்கிக் கொண்டிருப்பவர். அத்தனை தமிழ் இதயங்களுக்கும் துடிப்பாய் இருப்பவர். இந்த ஒற்றை மனிதனுள் எத்தனை எத்தனை சிந்தனைகள் தான் இருக்கின்றதோ என்று எண்ணி எண்ணி வியக்காத நாளில்லை.
உங்களுக்கும் அவரைத் தெரியும். அவர்தான், கவிப்பேரரசு வைரமுத்து.

நேற்று (02-ஜனவரி-2009), கலைஞரின் “என் தம்பி வைரமுத்து” புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது தான் அந்த கருப்பு வைரத்தின் தரிசனம் கிடைத்தது. அவரின் பேச்சால் என்னை சிலிர்க்கச் செய்தார். விழா முடிந்த பின் எனது பிரதியில் கவிப்பேரரசுவிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டேன். வாழ்க்கையின் உன்னத நிகழ்வுகளில் ஒன்றாக கருதுகிறேன். கைகுலுக்கினேன். மகிழ்ச்சியின் உச்சத்தின் இருந்ததால் பேச்சு வரவில்லை.

விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பேசிய உரையை இங்கு பதிவேற்றம் செய்துள்ளேன்.


என் சந்தோசத்தை உங்களோடு பரிமாறிக்கொள்ளவே இந்த வலைப்பூவில் பதிவு செய்துள்ளேன்.


நன்றி: நண்பர் “ஸ்ரீ...” அவர்களின் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. அவரின் வலைப்பூவில் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

நெருப்புநரி உலாவியில் தேவையில்லா தளங்களைத் திறக்காமல் எப்படித் தடுப்பது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம். இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் எப்படி ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தடுப்பது பற்றி அறிய இங்கு செல்லவும்.ஃபயர்பாக்ஸில் இதற்காகவே ஒரு நீட்சி உள்ளது. “FoxFilter" என்ற நீட்சி தேவையில்லா தளங்களைத் தடுத்திடும். கீழுள்ள முகவரியில் இருந்து, இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
இந்த நீட்சியை நிறுவிய பிறகு, Tool bar ல் இருந்து "FoxFilter Preferences". பக்கத்தைத் திறக்கவும். ஏனப்லெ Fஇல்டெரின்க் தேர்ந்து எடுக்கவும்.
free software, technology, firefox, firefox add-on, internet, parenting software

Block Listஐ திறக்கவும்.  ”porn" என்ற குறிச்சொல்லுடைய தளங்களைத் தடுத்திட வேண்டுமானால், அந்த சொல்லை உள்ளிடவும். ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தடுத்திட, அந்த தளத்தின் முகவரியைக் கொடுக்கவும்.


free software, technology, firefox, firefox add-on, internet, parenting software

இந்த அமைப்பை யாரும் மாற்றாமல் தடுத்திட, நீங்கள் கடவுச் சொல் கொடுத்துப் பாதுகாக்கலாம். ”Security"-ல் சென்று, கடவு சொல் கொடுக்கவும்.

free software, technology, firefox, firefox add-on, internet, parenting software

தடுத்திட்ட தளங்களைப் பார்வையிட்டால், கீழுள்ள திரை திறக்கும்.free software, technology, firefox, firefox add-on, internet, parenting software

இதே தகவலை ஆங்கிலத்தில் படிக்க, http://techblog.indioss.com/2009/01/how-to-block-certain-website-in-mozilla.html.

இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் குறிப்பிட்ட தளங்களைத் தடுப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஃபயர்பாகஸில் தடுப்பது அடுத்த பதிப்பில் வெளியிடுகிறேன்.1)இண்டர்நெட் எக்ஸ்பளோரரைத் திறக்கவும். மெனுபாரில் உள்ள ”Tools → Internet Options → Content.” என்பதைத் திறக்கவும். ”Content Advisor box”-ல், ”Enable” என்பதைச் சொடுக்கவும்.

2)  ”Approved Sites tab” திறந்து, நீங்கள் தடுக்க நினைக்கும் இணைய தளத்தின் முகவரியை உள்ளிடவும். ORKUT.COM-ஐ தடுக்க நினைத்தால், *.ORKUT.COM என்று உள்ளீடு செய்யவும். (முகவரிக்கு முன் * என்று போட வேண்டும்.) பின், “Never" என்பதைச் சொடுக்கவும்.

3)  ”General tab”-ஐ தேர்வு செய்து,   ”Users can see websites that have no ratings” எனபதைத் தேர்வு செய்யவும்.


4) பின் புதிய கடவுச் சொல்லைத் தரவும். பின் “ok"-தேர்வு செய்யவும்.


இப்போது, ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். சந்தேகம் இருப்பின், பின்னூட்டமிடவும்.
இதே தகவலை ஆங்கிலத்தில் படிக்க,  http://techblog.indioss.com/2008/12/how-to-block-certain-website-in.html


சென்ற வருடம், நான் நாட்குறிப்பு கணினியில் எழுதலாம் என்று திட்டமிட்டேன். முதலில், MS வேர்டில் எழுத ஆரமித்தேன். ஒரு வாரம் சென்றவுடன் அதை மேலான்மை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. பின் பல்வேறு தளங்களில் தேடி, 3 டிஜிட்டல் டைரி மென்பொருளைக் கண்டுபிடித்து உபயோகித்தேன். அதில் எனக்கு மிகவும் பிடித்து“iDigitalDiary".

இதை உபயோகிப்பது மிகவும் எளிமையாக உள்ளது. இதில் உங்கள் விருப்பம் போல், ஒரு நாளைக்கு எத்தனைப் பக்கம் வேண்டுமென்றாலும் எழுதலாம். இதில் எழுதப்படும் அனைத்து தகவல்களும் “என்கிரிப்ட்” செய்யப்பட்டுக் கணினியில் சேமிக்கப்படுகிறது. மேலும், இந்த மென்பொருளில் உங்கள் நாட்குறிப்பிற்கான கடவுச் சொல் கொடுத்தால் மட்டுமே, திறக்கும். ஆகையால், அனைத்துத் தகவல்களும் மிக பாதுகாப்பாக இருக்கும்.


இன்றிலிருந்து ஆங்கிலத்தில் வலைப்பூ ஒன்று எழுத ஆரம்பித்துள்ளேன்.  http://techblog.indioss.com - தொடர்ந்து ஆதரவு

தாருங்கள்.

இதே தகவலை ஆங்கிலத்தில் படிக்க,இங்கு செல்லவும்.
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

CO.CC:Free Domain