இப்போது எல்லாம் MS Office 2007 தான் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக ஆபிஸ் 2003-ல் சேமித்திடும் கோப்புகள் யாவும் 2007-ல் திறக்கும். ஆனால், ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய கோப்புகளை ஆபிஸ் 2003-ல் திறந்திட முடியாது என்பது யாவரும் அறிந்ததே. ஏனெனில் ஆபிஸ் 2007-ல் சேமித்திடும் கோப்புகள் யாவும் .docx, . xlsx, .pptx என்று முடியும். இதை எப்படி படிப்பது என்று ஆபிஸ் 2003-க்குத் தெரியாது. ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய கோப்புகளை ஆபிஸ் 2003-ல் திறந்திட 2 வழிகள் உள்ளன. (ஆபிஸ் 2003 உபயோகிப்பவர்களுக்காக)
1) மைக்ரோ சாப்ட் "File Format Converter" என்ற patch ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை ஆபிஸ் 2003 இருக்கும் கணினியில் நிறுவினால், ஆபிஸ் 2007 கோப்புகள் அனைத்தும் அந்த கணினியிலும் திறக்கலாம்.
இதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். (27mb)
http://getitfreely.co.cc/content/open-ms-office-2007-files-ms-office-2003
2) இரண்டாவது வழி:
MS office 2007-ல் சேமித்திடும் போதே Save என்பதைத் தேர்வு செய்யாமல், Save As---> MS Office 97 - 2003 என்பதைத் தேர்வு செய்தால், ".doc" என்றே Save ஆகும். ஆகையால் MS Office 2003-ல் அதை திறக்கலாம்.
தொடர்புடைய சுட்டியாக நான் கருதுவது:
http://tamizh2000.blogspot.com/2008/12/2007.html
USEFUL LINK. THANK YOU
கூகிள் ரீடரில் உங்களுடைய பதிவை subscribe செய்திருக்கிறேன். புதிய பதிவுகளை நீங்கள் இடும்போது அதன் தலைப்பு மட்டுமே தெரிகிறது, cntent தெரிவதில்லை. RSS ஓடையில் எதோ பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன். பார்த்து சரி செய்யவும்.
@Nilofer Anbarasu,
நான் feedburner-ல் கணக்குத் துடங்கும் போது பாட்காஸ்ட் என்று தவறுதலாக தேர்ந்தெடுத்து விட்டேன். மீண்டும் ஒரு புதிய ஓடையை உருவாக்கி விட்டு முகவரி தருகிறேன். நன்றி.
வருக தமிழ்நெஞ்சம். உங்கள் தளம் மிக அருமையாக உள்ளது.