இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகித்தால் கணினிக்கு ஆபத்து என்பது பலருக்கும் தெரிந்த ஒரு உண்மை. தெரியாதவர்கள் இந்த பதிவைப் படித்து தெரிந்துக் கொள்ளவும். சில இணைய தளங்கள் இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே, நன்றாக தெரிகிறது. ஆகையால், சில நேரங்களில் நாம் அதை உபயோகிக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்க ஃபயர்பாக்ஸ் நீட்சி ”IE TAB" வழிவகுக்கிறது.

இந்த நீட்சியை நிறுவிய பிறகு, படத்தில் காட்டியது போல் ”Open this link in IE Tab" என்ற ஆப்சன் சேர்ந்து விடும். ஆகையால் இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே திறக்கும் இணைய தளங்களையும் ஃபயர்பாக்ஸிலேயே பார்வையிடலாம்.

”கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! ” - “நெருப்பு நரி இருப்ப ஐ.ஈ கவர்ந்தற்று!

5 Comment(s)

 1. Nilofer Anbarasu // 12/30/2008 06:07:00 AM  

  சும்மா சொல்லக்கூடாது..... கலக்குறீங்க பாஸ். ஏறக்குறைய நீங்க பரிந்துரைக்குற எல்லா மென்பொருளையும், எனக்கு உபயோகப்படும் என்று தோன்றும் பட்சத்தில், என் கணினியிலும் நிறுவி வருகிறேன். ரொம்ப உபயோகமாக இருக்கிறது.

 2. anbagam- a home for hiv affected children // 12/31/2008 07:20:00 PM  

  - “நெருப்பு நரி இருப்ப ஐ.ஈ கவர்ந்தற்று!”


  எப்படித்தான் யோசிக்கிறிங்களோ ??!!!!!

 3. ஜீனோ கார்த்திக் // 12/31/2008 07:25:00 PM  

  நெருப்பு நரி மேல உள்ள காதல்னால அதுவா வருது!

 4. ஜீனோ கார்த்திக் // 1/01/2009 10:31:00 AM  

  Nilofer Anbarasu,
  எல்லாம் நீங்க தருகின்ற ஆதரவு தான் நண்பரே.

 5. Anonymous // 1/01/2009 12:25:00 PM  

  ரெம்ப பயனுல்ல குறிப்பு
  நன்றி

CO.CC:Free Domain