புது வருடம் வரப்போகிறது! எல்லாரும் தங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்ப ஆரம்பித்திருப்பீர்கள். உங்களைப் போல நானும் வாழ்த்து அட்டை அனுப்ப, நேற்று முழுவதும் இணையத்தில் உள்ள வாழ்த்து அட்டை சேவை அளிக்கும் இணைய தளங்களில் தேடிக்கொண்டிருந்தேன். கால விரயம் ஆனது தான் மிச்சம். என் விருப்பப்படி எதுவும் கிடைக்கவில்லை. எல்லா இணைய தளங்களும் ஃபிளாஷ் கோப்புகளாகத் தான் தருகிறார்கள், அதை நகல் எடுக்கக்கூட முடிவதில்லை.

”ஏன் நாமே ஒரு வாழ்த்து அட்டை தயாரிக்கக்கூடாது?” என்று எண்ணி ”போட்டோஷாப்பில்” ஆரம்பித்தேன். அதில் உருவாக்கிய அட்டையில் ஒரு நேர்த்தி கிடைக்கவில்லை.

என்ன செய்யலாம் என்று கூகிள் பகவான் கிட்ட கேட்ட போது தான், “இந்த மென்பொருளைக்” காண்பித்தார்.

இந்த மென்பொருளின் பெயர் “Photo Card Maker".  இதில் நிறைய டெம்ப்ளேட்கள் உள்ளன. அதில் உங்க போட்டோவையும்,&ன்ப்ஸ்ப்; உங்கள் வாழ்த்துச் செய்தியையும் பொதித்து, அதை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.புத்தாண்டுக்கு, நீங்களே செய்த வாழ்த்து அட்டையை நண்பர்களுக்கு அனுப்பி ஆச்சர்யப்படுத்துங்கள்.


http://getitfreely.co.cc/content/unique-greeting-card-maker

7 Comment(s)

 1. அமிர்தவர்ஷினி அம்மா // 12/29/2008 03:41:00 PM  

  useful info. thanks for sharing it.

 2. அன்புடன் அருணா // 12/29/2008 04:05:00 PM  

  wow...I've become great fan of ur blog....ur posts are too good and useful...
  anbudan aruna

 3. சேட்டை கோபி // 12/29/2008 10:11:00 PM  

  ரொம்பா சூப்பருரப்பு!

 4. ஜீனோ கார்த்திக் // 12/29/2008 10:21:00 PM  

  // அன்புடன் அருணா கூறியது...

  wow...I've become great fan of ur blog....ur posts are too good and useful...
  anbudan aruna//

  உங்க ஆதரவும் கருத்துக்களும் தான் உற்சாக மருந்து! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா.

 5. ஜீனோ கார்த்திக் // 12/29/2008 10:23:00 PM  

  வருக, அமிர்தவர்ஷினி அம்மா & கோபி.

 6. Nilofer Anbarasu // 12/30/2008 06:04:00 AM  

  இந்த மாதிரி ஒரு toolஐதான் ரொம்பநாளா தேடிக்கிட்டு இருக்கேன்......நியூ இயர், பொங்கல் என்று வருசையாக விஷேசம் வரும் வேளையில் ஒரு நல்ல மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ரொம்ப நன்றி.

 7. Anonymous // 4/19/2010 01:07:00 PM  

  அருமையான மென்பொருள்

CO.CC:Free Domain