வணக்கம். தங்களது ஜிமெயிலில் உள்ள புகைப்படங்கள், Videos (தமிழாக்க உதவவும்!), கோப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க உதவும் சேவை.இது தற்சமயம் ஜிமெயில் பயனாளர்களுக்கு ஃபயர்ஃபாக்ஸால் தரப்படுகிறது. வருங்காலத்தில் பிற பயனாளர்களுக்கும் நீட்டிக்கப்படலாம்.
வழிமுறைகள்:
1) ஃபயர்ஃபாக்ஸ் பயனாளர்கள் கீழுள்ள வலைப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து ஃபயர்ஃபாக்ஸில் சேர்த்துக் கொள்ளவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8257
2) xoopit தளத்திற்குச் செல்லவும்.
3.) தங்களது ஜிமெயில் முகவரி மற்றும் ஜிமெயில் கடவுச்சொல்லைக் கொடுத்துப் பதியவும்.
4.) மறுமுறை தங்கள் ஜிமெயிலில் xoopit சேர்ந்து கொள்ளும்.
பயன்படுத்துவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் தெரிவிக்கவும்.
குறிப்பு: இது ஃபயர்ஃபாக்ஸ் பயனாளர்களுக்கு மட்டும் ! !
மாதிரிப் புகைப்படம்:
நட்புடன்,
ஸ்ரீ..
http://srivathsan.wordpress.com
வாங்க, ஸ்ரீ. மிகவும் பயனுள்ள பயர்பாக்ஸ் அட்-ஆன் பற்றிச் சொன்னத்ற்கு நன்றி நண்பரே.
நீங்கள் கொடுத்துதவிய பயர்பாக்ஸ் அட்-ஆன் பயன்பாட்டிற்கு நன்றிகள் பல நண்பரே.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஜிமெயில் முகவரி மற்றும் ஜிமெயில் கடவுச்சொல்லை எப்படி xoopit தளத்திடம் கொடுக்க முடியும்? ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை எங்கும் எதற்காகவும் கொடுக்க வேண்டாம் என்று ஜிமெயில் நிர்வாகம் பலமாக சிபாரிசு செய்யும்போது, இப்படி கொடுப்பது அவ்வளவு நல்லதாக தெரியவில்லை. orkut போல் xoopit ஜிமெயிலின் இன்னொரு toolஆகா இருந்தால் கொடுக்கலாம்.
தங்கள் சந்தேகம் நியாயமே. பாதுகாப்பான முறையில் புகைப்படப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் தாங்கள் அஞ்ச வேண்டியதில்லை. மேலும் விவரங்களுக்கு ஃப்யர்ஃபாக்ஸ் மற்றும் xoopit தளங்களில் உள்ள விவரங்களைப் பார்வையிடவும். எனது தனிப்பட்ட புகைப்படங்கள் யாவும் xoopit மூலமாகத்தான் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் சந்தேகங்கள் இருப்பின், எழுதவும். நன்றி.
நட்புடன்,
ஸ்ரீ..
http://srivathsan.wordpress.com