
இணையத்தில் எந்த வலைத்தளத்திற்குச் சென்றாலும் பதிவு செய்ய வேண்டியதுள்ளது. பல இணைய தளங்களை நம்ப முடிவதில்லை. அதே நேரம், நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை. சில இணையதளங்கள் தங்கள் பயனர்களின் மெயில் ஐடியை விற்றுவிடுகின்றனர், இதனால் ஸ்பேம் தொல்லைகள் தாங்கமுடிவதில்லை. சிலர் இணையத்தில் பதிவு செய்வதற்கு என்றே ஒரு ஐடி வைத்திருக்கிறார்கள். அதிலும், என்ன பிரச்சனை என்றால், எதைப் படிக்க எதை விட என்று தெரியாமல், நல்ல மெயில்களையும் படிக்காமலேயே விட்டுவிடுகின்றனர்.
நல்ல உத்தி ஒன்று உள்ளது, இணையத்தில் பதிவு செய்வதற்கு ஒரே ஒரு ஜிமெயில் ஐடி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மெயில் ஐடி, "உங்கள்-மெயில்-ஐடி@gmail.com" என்று வைத்துக் கொள்வோம். இனி வலைத்தளங்களில் பதிவு செய்யும் போது, "உங்கள்-மெயில்-ஐடி+வலைத்தளப் பெயர்@gmail.com" எனக் கொடுக்கவும்.
"+"-ற்கும் "@"ற்கும் என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வலைத்தள முகவரிகொடுத்தால், நாம் எளிதாகாக அறிந்து கொள்ளலாம். என்ன கொடுத்தாலும், ஜிமெயில் சர்வர் அதை ignore செய்து விட்டு, அந்த மெயிலை உங்களுக்கே அனுப்பி விடும். ஆகையால், இப்போது வேறு வேறு இணையத்தளத்தில் இருந்து வேறு வேறு மெயில் ஐடிக்கு மெயில் வரும். ஆனால், வந்து சேர்வது ஒரே "இன்பாக்ஸ்"ற்குத் தான். எதாவது, ஒரு மெயில் ஐடிக்கு ஸ்பேம் வர ஆரம்பித்தால், "பில்டர்" ஆப்சனைப் பயன்படுத்தி, அதை நேராக, குப்பைக்குச் செல்ல வைத்து விடலாம்.
குறிப்பு: இது ஜிமெயில் பயன்களுக்கு மட்டுமே.
அருமையான தகவல் நண்பரே! இது தெரியாம, நாலு அஞ்சு ஐடி வச்சுகிட்டு மேனேஜ் பண்ண தெரியாம முழுசிட்டு இருந்தேன். நன்றிகள் பல!