ஜிமெயில் பயனர்கள் அனைவரும் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய அமைப்பு(செட்டிங்) இது. இதனால் உங்கள் ஜிமெயில் பாதுகாப்பாக இருக்கும். அனைவருக்கும் http://-க்கும் https://-க்கும் வேறுபாடு அறிந்திருப்பீர்கள். https:// என்பது உங்கள் "பாஸ்வேர்ட்" போன்ற முக்கியமான தகவல்களை மிக பாதுகாப்பான முறையில் என்கோட் செய்து இணையத்தில் அனுப்பும் முறை ஆகும். பொதுவாக ஜிமெயில் http://mail.google.com என்றே திறக்கும். அதை https://mail.google.com என மாற்ற, கீழே குறிப்பிட்டது போல் செய்யவும்.
1. உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழையவும்.
2. செட்டிங்ஸ் (அமைப்புகள்) பக்கத்திற்குச் செல்லவும். அந்த பக்கத்தின் கடைசியில் "Browser Connection" (உலாவி இணைப்பு) என்று இருக்கும். அதில் "Always Use https://" என்பதைத் தேர்ந்து எடுத்தால், இனி உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையும் போது, https:// என மாறிவிடும். ஆகையால், உங்கள் ஜிமெயில் மிக பாதுகாப்பாக மாறிவிடும்.
ஆங்கிலத்தில் ஜிமெயில் பயன்படுத்துவேருக்கு:
தமிழில் ஜிமெயில் பயன்படுத்துவேருக்கு: ("எப்போதுமே https:// யைப் பயன்படுத்துங்கள்" என்பதற்குப் பதிலாக "எப்போதுமே https:// யைப் பயன்படுத்துங்கள்" என பிழையாக இருக்கிறது. இருப்பினும் முதல், விருப்பத்தையே தேர்ந்து எடுக்கவும்.)
நல்ல பதிவு... மற்றும் பயனுள்ள புதிய விசயம்...
அருமை......
I went to settings page many times but never noticed this option. Thanks for the useful information.
Faizal, Nilofer Anbarasu & Dr. சாரதி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மன்னித்துக்கொள்ளுங்கள்...! எனக்கே என் நன்பர்கள் தான் ஈமெயிலில் அனுப்புகிறார்கள். அந்தப் பதிவுக்கு கீழே உங்கள் வலைப்பதிவை போட்டுவிடவா..? இனிமேல் காப்பி செய்து ஈமெயிலில் வரும் பதிவுகளை போடமாட்டேன்.