@ஜிமெயில், @யாஹூ.com, என்றில்லாமல், உங்களுக்குன்னு சொந்தமா ஒரு இமெயில் டொமன் வேண்டுமா? பிடிச்ச பேரு கிடைக்காம, உங்க மெயில் ஐடில ஏதேதோ எண்களைச் சேர்த்து ஞாபகம் வச்சிருப்பதற்கே கஷ்டமாக இருக்கா? இல்லை புதுசா ஒரு கம்பனி ஆரம்பிச்சு அதற்கு புது இமெயில் ஹோஸ்டிங் தேடிட்டு இருக்கீங்களா? அல்லது, உங்க மெயில் சேவை நல்லா இல்லைன்னு வேற நிறுவனம் தேடிட்டு இருக்கீங்களா? அவர்களுக்காக வந்தது தான், கூகிள் ஆப்ஸ் (Google Apps).
பொதுவாக, இமெயில் ஹொஸ்டிங் நிறுவனங்கள் 100 ஐடிக்காக, 3000 ரூபாய் முதல் 6000 வரை கட்டணம் வசூல் செய்கிறார்கள். இப்போது அவ்வளவு எல்லாம் கட்ட தேவை இல்லை. ஜிமெயிலில் இருக்கும் எல்லா வசதிகளையும் பெற்றிடலாம். ஆனால், உங்க மெயில் ஐடி “உங்கள்பெயர்@உங்கள்-பெயர்.காம்” என்று இருக்கும்.
எனது இமெயில் நுழைவு பக்கத்தைப் பார்க்கவும். உங்களுக்கே புரியும்.
எனது இமெயில் நுழைவு பக்கத்தைப் பார்க்கவும். உங்களுக்கே புரியும்.
கூகிள் ஆப்ஸ்-க்கு நீங்கள் பணம் ஏதும் செலுத்த வேண்டாம். ஒரு டொமைன் நேம் மட்டும் வாங்கிக் கொண்டால் போதும். (www.name.com - இங்கு போய் பாருங்க, 6 டாலர் தான் ஆகிறது. 300 ரூபாய் எங்கே 3000 ரூபாய் எங்கே?)
மெயில் சேவை மட்டும் அல்லாது, கூகிள் டாக், கூகிள் டாக்குமெண்ட், ஸ்டார்ட் பேஜ் போன்ற பல சேவைகளைத் தருகிறது.
நான் சொந்த உபயோகத்திற்காக, Co.CC-இன் இலவச டொமன் நேம் கொண்டு, செட் செய்துள்ளேன். இதை எப்படி செட் செய்வது என்பதைக் குறித்து, எனது ஆங்கில தளத்தில் வெளியிட்டுள்ளேன். அதில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
http://getitfreely.co.cc/content/free-yournameyournamecocc-mail-id
”.காம்” செட் செய்ய கஷ்டமாக இருந்தால் என்னை “tamil @ dearbabu.co.cc" என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். இங்கேயே பின்னூட்டம் இட்டாலும் சரி, முடிந்த வரை உதவுகிறேன்.

வணக்கம் நண்பரே,
உங்கள் கட்டுரையினை படித்தேன்.மிகவும் நன்றாயிருந்தது.
தயவு செய்து கீழ் கண்ட என் ஐயத்தை தீர்த்து வைக்கவும்.
ஒரு graphicopes.co.cc என்ற டொமைன் create பண்ணி வைத்துள்ளேன்.
ஆனால் "url redirect option" ஐ தேர்வு செய்து என்னுடைய blogspot வலைபூவிற்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.
கேள்வி 1: அந்த "redirect url option" ஐ எப்படி "remove"செய்வது?
கேள்வி 2: graphicopes.cp.cc என்ற டொமைன்-ஐ நான் என் "பிசினஸ்' க்காக உபயோகிக்க முடியுமா?
question 3: how can i use that domain(graphicopes.co.cc) as my webpage?
குறிப்பு : "Google aps" உபயோகிக்க ஆவலை உள்ளேன்.(E-mail for my colleagues)
உங்கள் பதிலை மிகவும் ஆவலுடன் எதிபார்த்து இருக்கிறேன்
நன்றி
Jaikanth