நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.  குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே! 
நீங்கள் அனுப்பிய மெயிலை உங்கள் நண்பர் படித்து விட்டாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. 

செய்முறை விளக்கம்:

1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2).  இப்போது, www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.

அங்கு, உங்கள் முகவரி, உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.  Step 3 -ல் முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்க.  (அப்படி செய்தால், நீங்கள் ட்ராக் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.)

3).  இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும்.  அதன் மீது சுட்டியை வைத்து,  வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image" (Firefox) & Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.  
இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து, அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
(கவுண்ட் டவுன் டைமர் ஓடும், அந்த ஒரு நிமிடத்திற்குள் மேலே கூறியதைச் செய்ய வேண்டும்.) அவ்வளவு தான்.


நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும். 

செஞ்சு பாருங்க, சந்தேகம் என்றால் கேளுங்க.

6 Comment(s)

 1. Anonymous // 9/05/2008 12:59:00 PM  

  நல்ல முயற்சி நண்பரே. ஆங்கில பதிவுலகில் உங்களை போன்ற தொழில்நுட்பம் குறித்து பதிவு எழுத ஆரம்பித்தவர்கள் தான் இன்று லட்சங்களை வாரி குவித்து வருகின்றனர். தமிழ் பதிவுலகை மிக சரியான நேரத்தில் தொழில் நுட்ப விசயங்களை எளிய தமிழில் தருகிறீர்கள். நீங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு மிக அதிகம். தொடர்ந்து எழுதுங்கள். தினமும் ஒரு பதிவு எழுதுங்கள். ஈமெயில் சந்தாதாரர்களை அதிக படுத்துங்கள். அப்போதுதான் உங்கள் வாசகர்களை தொடர் வாசகர்கலாக்க முடியும். கூகிள் அட்சென்ஸ் விரைவில் தமிழ் பதிவர்களை அங்கீகரிக்கலாம். அப்போது அதிக‌ பணம் ஈட்டும் வாய்ப்பும் கிட்டும்

  வாழ்த்துக்கள்

 2. Anonymous // 9/05/2008 01:58:00 PM  

  I did not tried yet. But very useful info. Thanks dude.

 3. Anonymous // 9/05/2008 05:34:00 PM  

  tamizha excellent

 4. ஜிஎஸ்ஆர் // 9/06/2008 01:10:00 PM  

  நான் செய்து பார்த்தேன் கவுண்ட் டவுன் டைம் வரும் பொழுது என்ன செய்ய வேண்டும் எனப்தை கொஞ்சம் விளக்கமாக கூறவும்

 5. ஜிஎஸ்ஆர் // 9/06/2008 01:13:00 PM  

  nan try panni parthen enaku workout panna theriayala 3rd step image copy eduthu en mailla paste panniten appuram 4th step countdown varum pothu enna seianum enaku theriala atha konjam vilakkama sonna uthaviya irukkum

 6. ஜீனோ கார்த்திக் // 9/07/2008 02:16:00 PM  

  கவுண்ட் டவுன் டைமர் 0 வருவதற்குள், அந்த பெட்டியில் இருக்கும் படத்தின் மீது ரைட் கிளிக் செய்து அதை காப்பி செய்யுங்கள். பின், இமெயிலில் அதை ஒட்டிவிட்டு அனுப்பிவிடவும். அவ்வளவுதான் நண்பரே.

CO.CC:Free Domain