எளிதாக PDF பைல் உருவாக்கலாம் வாங்க!!!

By: ஜீனோ கார்த்திக் | 8/17/2008 11:41:00 PM | 4 Comment(s) »

"Data Security"-க்காகவும், தகவல்களை யாரும் மாற்றாமல் தடுப்பதற்ககாவும், தகவல்களை PDF file-ஆக மாற்றிய பின்னரே இணையத்தில் வெளிடுகின்றனர். மேலும் Official-ஆக data file, document, bills, invoice அனுப்புவதற்கும் PDF format உதவுகிறது.

இந்த பதிப்பில்
PDF / Portable Document file- எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்!

இந்த

http://www.getitfreely.co.cc/content/cute-pdf-creater
இணையதளத்தில் இருந்து கீழே கொடுக்கப் பட்டுள்ள இரண்டு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவும்.

1) Converter

2) CutePDF Writer

முதலில் "Converter"-ஐ install பண்ணவும். பிறகு, CutePDF Writer-ஐ பதிவிறக்கம் செய்து install செய்யவும். இதற்க்கு மாறாக, CutePDF writer-ஐ முதலில் install செய்தால், அது மீண்டும் "Conveter"-ஐ பதிவிறக்கம் செய்து காலத்தை விரயம் செய்யும்.

இந்த software ஒரு virtual printer-ஐ install செய்கிறது. இந்த இரு software-களையும் install பண்ணிய பிறகு, Office, Paint, போன்ற எதாவது ஒரு program-ஐ திறக்கவும். நீங்கள் PDF ஆக மாற்ற விரும்பும் ஒரு Document-ஐ திறக்கவும். அல்லது அதில் தகவல்களை type செய்யவும்.


PDF உருவாகுவதற்கான வழிமுறைகள்:

"File---> Print" - என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
இதை போல ஒரு Printer Window open ஆகும். அதில் "Name" எதிராக உள்ள Drop down listbox- click செய்தால், "CutePDF Writer" என்று இருக்கும். அதை select செய்யவும். பிறகு "Print" button-ஐ click செய்யவும்.

புதிதாய் உருவாக்கிய PDF file-ஐ எங்கு save பண்ண வேண்டும் என்று கேட்கும். File Name மற்றும், Location-ஐ select செய்யவும். அவ்வளவு தான். PDF File create ஆகிவிட்டது. Acorabat reader-ல் open செய்து சரி பார்த்து கொள்ளவும்.

4 Comment(s)

 1. Anonymous // 8/18/2008 04:06:00 PM  

  Thanks

 2. Anonymous // 9/05/2008 03:57:00 PM  

  அருமை

  - சேவியர்

 3. THANGAMANI // 9/10/2009 06:51:00 PM  

  VERY USEFUL THANKS

 4. மோகனன் // 10/06/2009 02:17:00 PM  

  அருமை தோழரே.. இரண்டு வார கால சிக்கலுக்குப் பிறகு.. இன்று தெளிந்தேன்...

CO.CC:Free Domain