இப்போது இணையத்தில் புழக்கதில் உள்ள Co.in, com.sg போல Co.CC டொமைன் பெயரும் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.  இதற்கு முக்கிய காரணம், இந்த டொமைன் உங்களுக்கு இலவசமாகவே தருகிறது, Co.CC நிறுவனம். மேலும், பலரும் தங்கள் பிளாக்கரின் பெயர்களை சிறிதாக மாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர்.  (உங்கள் பிளாக்கர் பெயரில் உள்ள, “.blogspot" / ".wordpress"-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது.)  எளிதாக, உங்கள் பிளாக்கின் பெயரை “உங்கள்பெயர்.co.cc" என்று மாற்றிக்கொள்ளலாம்.  “.காம்”, “.இன்” இல் கிடைக்காத டொமைன் பெயர்களும் எளிதாக கிடைக்கும். 

CO.CC:Free Domain
எனது தளத்தைப் பார்க்கவும். (http://getitfreely.co.cc).  Tinyurl அளித்து வரும் url masking போல அல்லாமல், உங்களுக்குப் பிடித்த பெயரை உங்கள் பிளாக்கிற்கு வைக்கலாம்.  நீங்கள் புது பெயர் மாற்றினாலும், உங்கள் பழைய அட்ரஸும் வேலை செய்யும்.

இப்போ, எப்படி அமைப்பது என்று பார்ப்போம். இரு முறைகள் உள்ளன.  முதலில், எளிதான, url forwarding method-ஐ பார்ப்போம்.  அடுத்த பதிவில், dns setting முறையைப் பார்ப்போம். 

1).  CO.CC - இந்த இணையதளத்திற்குச் செல்லவும்.

2). உங்களுக்குப் பிடித்த பெயரைத் தேடவும், (check availability).

3). நீங்கள் தேர்ந்து எடுத்த பெயர் இருந்தால், "confirmation" பக்கத்திற்குச் செல்லும். அங்கு “Continue to Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.


4). படத்தில் காட்டியது போல, திரைத் திறக்கும்.  அங்கு “Create an New Account Now" என்பதைக் கிளிக் செய்து ஒரு புதிய அக்கவுண்ட் திறக்கவும்.  செட்டப் என்று வரும், அதை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் உள்ள மூன்றாவது option (url forwarding / url hiding)ஐ கிளிக் செய்து, அங்கு உங்கள் பிளாக் முகவரியைக் கொடுத்து Save செய்யவும்.

5).  இப்போது, நீங்கள் புதிதாக உருவாக்கிய பெயரை அட்ரஸ் பாரில் தட்டுங்க, உங்க பிளாக் திறக்கும்.  நண்பர்களிடம் சொல்லும் போது, பிளாக்-பெயர்.blogspot.com என்று பெரிதாக செல்லாமல்,  "பெயர்.co.cc" என்று செல்லுங்கள். அவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.

அப்படியே, நீங்கள் உருவாகிய பிளாக் பெயரைப் பின்னூட்டமாக இடவும்.


CO.CC:Free Domain

11 Comment(s)

 1. இவன் // 8/24/2008 02:08:00 PM  

  இதனை தமிழ்மணத்தில் இணைக்க முடியுமா??

 2. ஜீனோ கார்த்திக் // 8/24/2008 02:38:00 PM  

  இந்த பதிப்பில் கூறி இருப்பது, url forwarding-ஐ பற்றி. இதை அட்ரஸ் பாரில் டைப் செய்தால், உங்களுடைய பிளாக் திறக்கும். தமிழ் மணத்தில் இணைப்பதற்கு டொமைன் mapping செய்ய வேண்டும். அது பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

  எ.கா: http://www.radioindia.co.cc - இந்த டொமைனை திறந்தால், எனது இன்னொரு வலைப்பூ திறக்கும். அது மாதிரி செட் செய்தால், சேர்க்கலாம்.

 3. selvaraj // 8/24/2008 04:07:00 PM  

  வணக்கம் பாபு , பயனுள்ள தகவல்களை எளிய தமிழில் தருகிறீர்கள் வாழ்த்துக்கள் . என்னுடைய வலைப்பதிவு தளத்தை இப்படியாக பெயர் மாற்றம் செய்துள்ளேன்.
  www.tvmselva.co.cc
  நன்றி.

 4. ஜீனோ கார்த்திக் // 8/24/2008 05:43:00 PM  

  @இவன், உங்கள் பழைய முகவரியும் வேலை செய்யும், ஆகையால், தமிழ்மணத்தில் இப்போது உறுப்பினாராக இருந்தால் அப்படியே இருக்கட்டும்.


  ///selvaraj on August 24, 2008 4:07 PM

  வணக்கம் பாபு , பயனுள்ள தகவல்களை எளிய தமிழில் தருகிறீர்கள் வாழ்த்துக்கள் . என்னுடைய வலைப்பதிவு தளத்தை இப்படியாக பெயர் மாற்றம் செய்துள்ளேன்.
  www.tvmselva.co.cc
  நன்றி.////

  தளம் அருமையாக இருக்கிறது தோழா.

 5. வடுவூர் குமார் // 8/24/2008 07:38:00 PM  

  ஆமாம்,ஆரம்பித்த பிறகு இதை மூடிடமாட்டாங்களே??
  :-))

 6. ஜீனோ கார்த்திக் // 8/24/2008 07:43:00 PM  

  அவர்களது தளத்தில் மூட மாட்டார்கள் என்றே கூறுகின்றனர். மேலும், url forwarding உபயோகித்தால், உங்கள் பழைய முகவரி அப்படியேதான் இருக்கும். அதனால், உங்கள் பிளாக்கிற்கு எந்த பாதிப்பும் இல்லை.

 7. ஜீனோ கார்த்திக் // 8/24/2008 10:45:00 PM  

  /////மற்றும் உங்கள் தளங்களை விளம்பரம் , தமிழ்மணம், தமிழிஸ் போன்ற தளங்களில் பகிரும் போது இது போன்ற இலவச பெயர்களை உபயோகிக்காதீர். yourname.blogspot.com, yourname.wordpress.com என்றே உபயோகிக்கவும். அவைதான் நிரந்தரம், பெரிய நிறுவனங்களால் நிர்வகிர்க்க படுபவை. நம்பகத்திற்குரியாவை . காலப்போக்கில் அவைதான் உபயோக படும். இது போன்ற இலவசங்கள் விரைவில் இறந்து விடும்.////


  சரிதான், விளம்பரங்களுக்கு உபயோகிக்கும் போது உங்கள் முகவரியையே கொடுக்கவும்.  ///////

  என்னுடைய கருத்து இதுதான், நீங்கள் சீரியஸ் ஆக தளம் உருவாக்கினால், இந்த இலவசத்தை தேடி போக வேண்டாம். விளையாட, கற்றுக்கொள்ள இது போன்றவற்றை உபயோகிக்கவும்./////

  கண்டிப்பாக நல்ல தளங்கள் உருவாக்கும் போது டொமைன் பெயர் வாங்கிக் கொள்ளலாம். சொல்வதற்கு எளிதாக இருக்கிறதே என்று தான் பரிந்துரைத்தேன். வேறொன்றும் இல்லை.

  மேலும், செட் டப் செய்யும் போது, url Forwarding தேர்ந்து எடுக்கவும். url hiding தேர்ந்து எடுக்க வேண்டாம். url Forwarding select செய்தால், உங்கள் பெயருக்கு உடனே மாறிவிடும், ஆகையால், உங்கள் தளம் முகவரியும் எல்லாருக்கும் தெரிந்துவிடும்.

 8. Nilofer Anbarasu // 8/31/2008 11:15:00 AM  

  ஒரு முறை url set செய்தால் செய்ததுதானா? வேறு ஒரு தளத்திற்கு பின்னர் மாற்றி அமைக்க முடியுமா?
  அதாவது நான் abc.co.cc என்பதை abc.blogspot.com என்னும் urlக்கு செட் செய்கிறேன். பின்னாளில் அதே abc.co.cc என்பதை xyz.blogspot.com என்னும் urlக்கு செட் செய்ய முடியுமா?

 9. ஜீனோ கார்த்திக் // 8/31/2008 02:10:00 PM  

  எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

 10. Nilofer Anbarasu // 9/02/2008 11:43:00 PM  

  my new url
  theslate.co.cc

 11. Anonymous // 11/23/2008 04:35:00 AM  

  நாமளும் மாறிடமல்லே.......... தாங்சுங்கோ

CO.CC:Free Domain