சீரியஸாக பிளாக் எழுதுபவர்கள் “உங்கள்-பிளாக்-பெயர்.blogspot.com" என்று சப்-டொமைனில் எழுதுவதற்குப் பதிலாக ”உங்கள்-பிளாக்-பெயர்.காம்” என்ற முகவரியில் எழுதலாமே.  ஒரு டொமைன் நேம் வாங்குவதற்கு 6  டாலர்கள் (www.name.com) தான் ஆகும். 


இங்கு எப்படி செட் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.  விளக்கம் முழுவதும் தமிழ் டாஷ் போர்ட்டை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது.  தமிழில் டாஷ் போர்ட்டை மாற்ற இங்கே சொடுக்கவும்.


CO.CC வழங்கும் இலவச டொமன் நேமில் கூட செட் செய்யலாம்.  ஆனால் சீரியஸாக பிளாக்கிங் செய்ய ஆரம்பித்து விட்டால், வருடத்திற்கு ஆறு டாலர் பெரிய தொகையாக இருக்காது என்று நினைக்கிறேன்.   இலவச டொமன் நேம் கொண்டு, சென்ற பதிவில் கூறியிருப்பது போல கூட url forwarding செய்யலாம். அதாவது, பிளாக்-பெயர்.co.cc என்று கொடுத்தால், உங்கள் வலைப்பூ திறக்கும். இதை செட் செய்வது மிகவும் எளிது. அல்லது CO.CC-இல் DNS setting-ஐ தேர்ந்து எடுத்தாலும், கீழே சென்னதைப் போல செட் செய்யலாம்.


இப்போது, டொமன் நேம் எப்படி செட் செய்வது என்று பார்ப்போம்.


1). முதலில் ஒரு டொமன் நேம் வாங்கிக் கொள்ளவும்.(www.name.com or www.maddogdomains.com) அதில் DNS setting-ல், CNAME தேர்ந்து எடுத்து, www.பிளாக்-பெயர்.com - கொடுத்து, value என்பதற்கு நேராக “ghs.google.com” என்று கொடுக்கவும். இது செட் ஆகி, அப்டேட் ஆக குறைந்தது 24 மணி நேரம் ஆகும். இனி செய்ய வேண்டியது எல்லாம், பிளாக்கரில் தான்.

2)டாஷ் போர்ட்டில் நுழையவும். அமைப்புகள் --> வெளியிடுதல் சொடுக்கவும்.

3) ”தனிப்பயன் டொமன்” சொடுக்கவும்.

4) ”முன்பே டொமைன் உள்ளதா? மேம்பட்ட அமைப்புகளுக்கு மாறுக”- ஐ சொடுக்கவும். இப்போது நீங்கள் வாங்கிய டொமன் பெயரைக் கொடுத்து(.com/net / .co.cc என்ற எக்ஷ்டன்ஸனோடு), அமைப்பைச் சேமிக்கவும்.

24 மணி நேரத்திற்குப் பொறுமைக் காக்கவும். பிறகி, “உங்கள்-பிளாக்.com", என்று தட்டினால், உங்கள் பிளாக் திறக்கும். மேலும், உங்கள் பழைய பிளாக் பெயரைத் தட்டினாலும், உங்கள் பிளாக் திறக்கும்.

(எ.கா: எனது புதிய வலைப்பூ www.radioindia.co.cc)

6 Comment(s)

 1. துளசி கோபால் // 8/31/2008 02:40:00 PM  

  என்னங்க இப்பச் சொல்றீங்க.....

  நான் சொந்தமா இடம் வச்சுக்கலாமுன்னு ரெண்டுவருசம் வாங்கிப்போட்டுருந்தேன். அதை எப்படி சரியானமுறையில் செய்யணுமுன்னு தெரியாததால் இந்த வருசம் புதுப்பிக்காமல் விட்டுட்டேன்(-:

 2. ஜீனோ கார்த்திக் // 8/31/2008 02:44:00 PM  

  ஹோஸ்டிங் இடம் எல்லாம் தேவை இல்லை நண்பரே, வெறும் டொமைன் நேம் இருந்தால் போதும். உங்களுக்கு தனியான, சொந்தமான, மேலும் பிளாக்கரின் அனைத்து வசதிகளுடனும் வைத்துக் கொள்ளலாம். இப்போ புதுசா ஒண்ணு வாங்கி ஆரம்பிங்க!

 3. Anonymous // 8/31/2008 08:22:00 PM  

  நல்ல விசயமெல்லாம் எழுதறீங்க..பதிவருக்கு நல்ல உபயோகமாகும்

 4. Anonymous // 9/14/2008 11:53:00 AM  

  அன்னதே சுப்ரா இருக்குபா

 5. ♥ மனிதன்@சென்னை ♥ // 11/11/2008 08:19:00 PM  

  www.beyouths.co.cc  ஆதிசிவம், சென்னை. நன்றி!.


  பாபு அவர்களுக்கு வணக்கம்

  உங்கள் வலைத்தளம் பார்த்து மிக மிக மகிழ்ந்தேன்.

  என் யானைப் பசிக்கு உங்கள் வலைத்தளம் சரியான தீனியாக இருக்கிறது.

  name.com தளத்தில் beyouths.com நேற்றுத்தான் வாங்கினேன். dns setting என்னால் சரியாக அமைக்க முடியவில்லை.

  அதே போல என்
  (www.beyouths.blogspot.com)

  வலைத்தளத்தில் beyouths.com என்ற பெயரை செட்டிங் செய்தால் பிழைச் செய்திதான் வருகிறது.

  ஆனால் google apps வழங்கிய இலவச இமெயிலை உருவாக்கி விட்டேன்.

  foryouths@beyouths.com

  என்ற பெயரில்...


  உங்கள் மொபைல் எண் அனுப்பி வையுங்கள். நானும் சென்னையில் தான் இருக்கிறேன்.

  உங்கள் உதவியை நாடுகிறேன்!

  என் மொபைல் எண்:

  9840957657

  ஆதிசிவம், சென்னை.

  நன்றி!

 6. ♥ மனிதன்@சென்னை ♥ // 11/11/2008 08:25:00 PM  

  பாபு அவர்களுக்கு வணக்கம்

  உங்கள் வலைத்தளம் பார்த்து மிக மிக மகிழ்ந்தேன்.

  என் யானைப் பசிக்கு உங்கள் வலைத்தளம் சரியான தீனியாக இருக்கிறது.

  name.com தளத்தில் beyouths.com நேற்றுத்தான் வாங்கினேன். dns setting என்னால் சரியாக அமைக்க முடியவில்லை.

  அதே போல என்
  (www.beyouths.blogspot.com)

  வலைத்தளத்தில் beyouths.com என்ற பெயரை செட்டிங் செய்தால் பிழைச் செய்திதான் வருகிறது.

  ஆனால் google apps வழங்கிய இலவச இமெயிலை உருவாக்கி விட்டேன்.

  foryouths@beyouths.com

  என்ற பெயரில்...


  உங்கள் மொபைல் எண் அனுப்பி வையுங்கள். நானும் சென்னையில் தான் இருக்கிறேன்.

  உங்கள் உதவியை நாடுகிறேன்!

  என் மொபைல் எண்:

  9840957657

  ஆதிசிவம், சென்னை.

  நன்றி!

CO.CC:Free Domain