கணினியில் தமிழில் எழுதிட......

By: ஜீனோ கார்த்திக் | 8/14/2008 10:27:00 PM | 5 Comment(s) »

தமிழில் டைப் செய்வதற்குப் பலரும் பல விதமான வழிமுறைகளைக் கையாளுகின்றனர். கூகிள், quilpad, போன்ற இணையத்திற்கு சென்று டைப் செய்துவிட்டு, பின் அதை வெட்டி வேண்டிய இடத்தில் ஒட்டுகிறார்கள். இணைய இணைப்பு இல்லாதோர் இந்த வசதியை உபயோகிக்க முடியாது. மேலும், ”கம்பன்” போன்ற தமிழ் வேர்ட் பிராசசர்கள் இணைய இணைப்பு இல்லாதோருக்கும் தமிழில் டைப் செய்ய உதவுகிறது. ஆனால், அந்த வேர்ட் பிராசசர் தவிர எங்கும் தமிழில் டைப் செய்ய வேண்டுமானால், அதே “வெட்டு, ஒட்டு” வேலை தான் செய்ய வேண்டும். ஆனால், இந்த NHM ரைடர் ஆனது, எங்கு வேண்டுமானாலும், டைப் செய்திட உதவும். “ஆல்ட்+2” தட்டினால், தமிழில் டைப் செய்யலாம், “ஆல்ட்+0” தட்டினால், ஆங்கிலத்தில் டைப் செய்திடலாம். ஒரு முறை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் இணைய இணைப்பும் தேவை இல்லை.

என்.ஹச்.எம் ரைடரைத் தறவிக்க, இங்கே சொடுக்கவும்.

இந்த மென்பொருளை உபயோகிக்கும் முறையை அறிந்து கொள்ள, இந்த pdf கோப்பைத் தரவிறக்கிக் கொள்ளவும்.

5 Comment(s)

 1. Anonymous // 8/16/2008 03:57:00 PM  

  நான் பயன்படுத்துவதும் இதுதான்.
  மிக மிக மிக மிக அருமையானது. பாவிக்க மிக இலகு.
  பதிவு சூப்பரு
  சுபாஷ்

 2. சிங்கம் // 8/17/2008 03:08:00 PM  

  நன்றி பாபு...

 3. சிங்கம் // 8/17/2008 03:10:00 PM  

  நன்றி பாபு

 4. SAFERETURNS // 8/20/2008 06:16:00 PM  

  பாபு தாங்கள் கொடுத்துவரும் அனைத்து தகவல்களும் எங்களுக்கு பயன் உள்ளதாக அமைந்து உள்ளது, நீங்கள் செய்துவரும் செயல்கள் பாராட்டுக்கு உரியது இன்னும் நிறைய தகவல்கள் கொடுங்கள் மேலும் இது போன்ற இன்னும் வேறு என்ன என்ன SITE OR BLOG உள்ளது என்று உங்கள் கருத்துடன் உங்கள் BLOG இல் கொடுத்தால் மேலும் பல விவரங்கள் நாங்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும், உங்களை கடந்து, கவர்ந்த் போகும் சில தமிழ் BLOG OR SITE களை கொடுங்கள்
  நன்றி
  பாலாஜி

 5. ஜீனோ கார்த்திக் // 8/23/2008 09:57:00 PM  

  கண்டிப்பாக பாலாஜி!

CO.CC:Free Domain