இணையத்தில் எதை வேண்டுமானாலும் சில மில்லி-நொடிகளில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகிறது. இதில் இருந்து மீள, இந்த மென்பொருள் (DK Finder) உதவுகிறது. இது, நீங்கள் தேடிய கோப்பை மிக மிக விரைவாக (0.1 நொடிகளில்) கண்டுபிடித்து தருகிறது. அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. 1 mb-க்கும் குறைவான அளவு கொண்ட மென்பொருள் , இத்தனை திறணான வேலை செய்வது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கே சொடுக்கவும்.
(இந்த பக்கதில் “Click here to Download" என்று இருக்கும். அதை கிளிக் செய்யவும்)

இந்த வீடியோவை பாருங்கள். இந்த மென்பொருளின் வேகம் தெரியும்.


3 Comment(s)

 1. selvaraj // 8/24/2008 04:46:00 PM  

  இந்த மென்பொருள் சிறப்பாக உள்ளது. இதைவிட (google desktop)கூகிள் டெஸ்க்டாப் "செயலி"(program)சிறப்பாக உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது

 2. ஜீனோ கார்த்திக் // 8/24/2008 05:02:00 PM  

  நானும் உபயோகித்துப் பார்த்தேன், ஆனால், google desktop முதல் முறை தயார் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. மேலும் அதனால், கணினி வேகம் குறைவது மாதிரி தோன்றுகிறது, செல்வா. ஆகையால் தான் நான் அதை உபயோகிப்பது இல்லை. கருத்துக்கு நன்றி

 3. U.P.Tharsan // 8/28/2008 03:53:00 AM  

  சகோதரரே மன்னிக்கவும். இந்த பதிவு என்னுடைய பெயரில் இருந்தாலும் இதை ஒருங்கமைப்பது என்னுடைய சகோதரனே. அவன் இந்த பதிவில் ஏனைய பலருடைய பதிவுகளில் இருந்தும் எடுத்து போட்டிருக்கிறான்.

  அப்படி அவன் அவற்றை போட்டாலும் (தொகுத்து) அவற்றுக்கான உரிமை பக்கத்தையும் இணைப்பது வளக்கம். தங்களுடைய பதிவுகளை போடும் போது மட்டும் அவன் தங்களுடைய தளத்தின் முகவரியை இணைக்க மறந்துவிட்டான்.

  ஆனால் நான் தற்போது அதை இணைத்துள்ளேன்.

  இல்லை எனது பதிவை நீர் போடவே வேண்டாம் என நீங்கள் கருதும் பட்சத்தில்.... தங்களுடைய பதிவுகளை எனது பதிவிலிருந்து நீக்கி விடுகிறேன்.

  புரிந்துணர்வுக்கு நன்றி.

  U.P.Tharsan (tharsan29@gmail.com)

CO.CC:Free Domain