டெக்ஸ்ட் சாட்டிங்கில் யாருடனும் அரட்டை அடித்தால், அதை நாம் “வெட்டு” & “ஒட்டு” வேலை செய்து பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனால், வாய்ஸ் சாட்டிங் பண்ணினால், எப்படி பதிவு செய்வது?
ராகா.காம்-இல் இருந்து பாடல் பதிவு செய்தல் பற்றி எழுதிய பதிவில் சொல்லப்பட்ட அதே மென்பொருளைக் கொண்டு, வாய்ஸ் சார்டிங்-ஐயும் பதிவு செய்யலாம்.  முதலில், அந்த பதிவை படிங்க.  இதில் இரண்டாவது வழிமுறையை மட்டும் விட்டுவிடவும். அதுக்கு பதிலாக, நீங்கள் அரட்டை தொடங்கும் போது, "Record" பொத்தானை அழுத்தி விடுங்கள், பதிவு ஆக ஆரம்பிக்கும்.  அப்படியே, 3, 4 & 5 வழிமுறைகளைப் பின்பற்றவும். வாய்ஸ் சாட்டிங் பதிவு ஆகி விடும்.
 இந்த மென்பொருளை நிறுவி வைக்கவும், எப்பொழுதாவது கண்டிப்பாக தேவை படும்.

குறிப்பு: பதிவு செய்யும் போது, உங்கள்  குரல் பதிவு ஆக வில்லை என்றால், உங்கள் கணினியில் “டாஸ்க் பாரில்”(அட டைம் எல்லாம் இருக்குமே, அங்க தான்) இருக்கும், ”ஸ்பீக்கர்” பொத்தானை இருமுறை கிளிக் செய்தால், ”Volume Control" திறக்கும்.  அதில் “Input Monitor" அடியில் இருக்கும் “Mute" டிக் செய்ய பட்டுள்ளதா என்று பார்க்கவும்.  அப்படி இருந்தால், அந்த டிக்கை எடுத்து விட்டுவிட்டு, Volume Slidebar-ஐ உங்களுக்கு ஏற்றாற்போல், வைத்துக்கொள்ளவும்.

1 Comment(s)

  1. Kevin Matthews // 8/24/2008 12:24:00 PM  

    எனக்கு ஒரு சந்தேகம். outlook 2007 ல் selected pages எப்படி print செய்வது?

CO.CC:Free Domain