தமிழ் என்று தேடினாலே, ராகா.காம் தான் இரண்டாவதாக வருகிறது. எல்லா தமிழரும் ராகாவிற்கு சென்று பாடல்கள் கேட்டு இருப்பீர்கள். ஆனால், அதில் பாடல்கள் தரவிறக்கம் செய்திட, பணம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் எப்படி இலவசமாக, ராகா மற்றும் அனைத்து பாட்காஸ்ட் தளங்களில் (embed செய்ய பட்ட ஒலி உள்பட) இருந்து தரவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
ராகா.காம், tamilbeat போன்ற இணைய தளங்களில் இருந்து மட்டுமல்ல, எந்த ஒலியை உங்கள் கணினியில் இருந்து கேட்டாலும் அதை நீங்கள் பதிவு செய்யலாம்.
முதலில், இந்த இணைய தளத்தில் இருந்து, mymp3 recorder-ஐ பதிவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவவும். (அப்படியே ஒரிரு விளம்பரத்தைச் சொடுக்கினால், நான் உருவாக்கிக் கொண்டிருக்கும், எனது பல்கலை கழக வலைதளத்திற்கு ஒரு டொமைன் நேம் வாங்குவதற்கு உதவியாக இருக்கும். )
முதலில், இந்த இணைய தளத்தில் இருந்து, mymp3 recorder-ஐ பதிவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவவும். (அப்படியே ஒரிரு விளம்பரத்தைச் சொடுக்கினால், நான் உருவாக்கிக் கொண்டிருக்கும், எனது பல்கலை கழக வலைதளத்திற்கு ஒரு டொமைன் நேம் வாங்குவதற்கு உதவியாக இருக்கும். )

ராகாவில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
1). இப்போது நிறுவிய மென்பொருளை இயக்கவும். படத்தில் காட்டியது போல் திரை திறக்கும். முதலில், ”Source" என்பதை கிளிக் செய்து, வலது புறத்தில் இருக்கும் “SteroMix"-ஐ கிளிக் செய்யவும்.
2). இப்போது, ராகா.காம் அல்லது உங்களுக்கு பிடித்தப் பாடல்கள் “ஒலிபரப்பும்” இணைய தளத்திற்குச் செல்லவும். உங்களுக்கு பிடித்த பாடலை ஓட விடவும். (இணைய இணைப்பு மெதுவாக இருந்தால், பாஸ் செய்து விட்டு, buffer ஆகி முடிந்தவுடன் ப்ளே செய்யுங்கள். (ராகா.காமில் இருந்து பாடல் கேட்க ரியல் ப்ளேயர் வேண்டும். முதலில் real player-ஐ உங்கள் கணினியில் நிறுவுங்கள். real player-ஐ பெற்றிட இங்கே செல்லவும்.
3). அதே நேரம், இந்த மென்பொருளில் “Record"(சிவப்பு நிற பொத்தான்) பொத்தானை அழுத்தவும். இப்போது, உங்கள் ஒலிபெருக்கியில் பாடும் பாட்டு, உங்கள் கணினியில் பதிவு ஆகிறது.
4). பாடல் முடிந்த பின், ”ஸ்டாப்” (வெள்ளை நிற பொத்தான்)-ஐ கிளிக் செய்யவும். சரிபார்த்து கொள்ள, ப்ளே செய்து பார்க்கவும்.
5). இன்னும் உங்கள் கணினியில் நிரந்தரமாக பதிவாக வில்லை. பாதுகாப்பாக, சேமித்திட “Save To Mp3" கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பான இடத்தில் சேமித்திடுங்கள். “Save to wav" என்று கொடுத்தால், அதிக கொள்ளளவு எடுக்கும்.
அவ்வளவு தான். இப்படி எந்த இணைய தளத்தில் இருந்தும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம்.
நீங்கள் இந்த உத்தியை பயன்படுத்தித் தரவிறக்கம் செய்தலில் வெற்றி(!) பெற்றால், மறக்காம கருத்து தெரிவிக்கவும். தோல்வி பெற்றாலும் சரி, கருத்து போடுங்க, சரி பண்ணிடலாம். நல்ல தமிழ்க் கவிதைகள், பட்டிமன்றம், பாடல்கள் ஒலிவடிவில் (பாட்காஸ்ட்) இருக்கும் இணைய தளம் தெரிந்தால், இங்கே அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.
ஒரே சொடுக்கில் youtube வீடியோவை தரவிறக்கம் செய்ய இத படிங்க.
i couldn't listen songs from raaga in the first place. it says i don't havproper player. but i do have real player. what to do?
மிக்க நன்றி பாபு. ராகா போனற தளங்களானது சாதா மக்களுக்கு சொந்தமான மேலும் அவர்களுடை அடிப்படை உரிமையான இசை கலை போன்ற இணைய ஒலி ஒளி கோப்புகளை தங்கள் சொந்த சொத்தாக மாற்றிக்கொண்டு அதை வைத்தே பணம் சம்ப்பதிக்கிறாங்க. இத்தைனைக்கும் இது போன்ற தளங்கள் உருவாக்கிய கலைஞர்களுக்கு பணம் கட்டுகிறார்களா என்பது கிடையாது என்பதே என் முழு கருத்து. இப்படி இருக்க வழி தேங்காயை எடுத்து கடை பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இலவசமாக உழைப்பில்லாமல் பணம் செய்கிறார்கள். இது வருத்தத்திற்குரிய செயல். வேண்டுமென்றால் ஏதோ கொஞ்சம் பணம் வேண்டுமானால் கட்டலாம். அதெற்குன்று அடாவடியாக அதிக பணம் சமாபாதிக்க முயல்வது அநியாயமே. உண்மையில், இது போன்ற தளங்கள் கலை கலாச்சாரம் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் முன்னிட்டு பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உண்மையான் கருத்துடன் இயங்குகிறார்கள் என்றால், இலவச விக்கிபீடியா ஃபயர் ஃபாக்ஸ் போன்று அன்பளிப்பு அடிப்படையில்தான் இயங்க வேண்டும்.
உங்கள் தொழில்நுட்ப உதவிக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இதுபோன்ற நல்ல விடயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன் மாசிலா
real player-ஐ உங்கள் கணினியில் நிறுவுங்கள். real player-ஐ பெற்றிட இங்கே செல்லவும்.
வருக வருக மாசிலா! உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். அவர்கள் என்ன தான் தடுத்திட்டாலும், எதாவது தொழில் நுட்ப ஓட்டை இருக்கும், அதை கண்டுபிடித்து நமக்கு சாதகமாக உபயோகித்து கொள்வதுதான் சாமர்த்தியம்.
என்ன பாபு,
//ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட! //
தரவிரக்கம் (downloading)
என்று தலைப்பை போட்டுவிட்டு, பதிவு செய்தல் (Recording) பற்றி தானே குறிப்பிட்டுள்ளீர்கள்.
தலைப்பை மாற்றினீர்கள் என்றால் நன்றாக இருக்கும் இல்லையா!
மதுவர்மன், எல்லாம் சும்மா படம் காட்ட தான்.வேற ஒண்ணுமில்லை.
http://applian.com/freecorder3/support/user_guide.php இந்த சுட்டியில் இருக்கும் toolbar ஐ கணினியில் இணைத்தாலும் தேவையான சத்தங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மிகப் பயனுள்ள பதிவு பாபு.
தரவிறக்கம் செய்து கொண்டேன்.
அருமையாக வேலை செய்கிறது நண்பரே.
பதிவிட்ட உங்களுக்கும் உங்கள் பதிவின் சுட்டி தந்த நண்பர் கார்த்திக்குக்கும் எனது நன்றிகள்.
நல்ல பயனுள்ள தகவல். தகவல் அளித்தமைக்கு நன்றிகள்.
உங்கள் பல்கலை கழகத்திற்கு டொமைன் வாங்குவதைபற்றி சொல்லி இருந்திர்கள் அதற்க்கு 600 ரூபாதான் செலவு ஆகும். இதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். www.one.com ற்கு சென்றால் உங்களால் மிக குறைந்த விலையில் டொமைன் நேம் மற்றும் 3000 MB இடத்தை இலவசமாக பெறமுடியும்.
@லோகநாதன், நாங்கள் மாணவர்களின் நோட்ஸ் & பழைய தேர்வு தாள் கொண்டு, ஆன் லைன் லைப்ரரி செட் செய்ய முடிவு செய்துள்ளோம், ஆகையால் அதற்குக் குறைந்தது, 100 ஜிபி ஆவது தேவை படும். அதற்கு ஒரு வருடத்திற்கு 3500 ரூபாய் தேவை படுகிறது. பழைய மாணவர்கள் யாரேனும் பொருளுதவி செய்தால் நன்றாக இருக்கும்.
http://www.auengineers.co.cc
kalathumedu freecoder Vista os ley support seivathu illai ,mikka nandri thiru BAbu