ஜிமெயில் / யாஹூ மெயில் ஹாக்!

By: ஜீனோ கார்த்திக் | 8/17/2008 11:17:00 AM | | 5 Comment(s) »

இந்த பதிப்பு ஜிமெயில் / யாஹூ மெயில் எப்படி ஹாக் செய்வது என்பது பற்றியது அல்ல. ( மத்தவங்க விஷயம் எல்லாம் நமக்கு எதுக்குங்க?) அப்படி நினைத்து வந்தவங்கள் அப்படியே அப்பீட்டு ஆய்டதிங்க. உங்க மெயில் ஐடி-ஐ 'இப்படி நினைக்கிறவங்க' கிட்ட இருந்து எப்படி காப்பாற்றுவது என்று தெரிஞ்சுகோங்க! மேலும் குப்பை மெயில், ஆன்லைன் மோசடிகளிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது பற்றியும் பார்ப்போம். நானும் என் நண்பனும் ஹாக் செய்து, ஹாக் செய்து விளையாடின போது தெரிஞ்சுகிட்டது. (வடிவேலும், முத்துகாளையும் செத்து, செத்து விளையாடுற மாதிரி)

உங்கள் இ-மெயிலை, 70% ஹாக் செய்வது உங்கள் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.(நாங்க செஞ்சுகிட்ட மாதிரி, பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் சில ரகசியங்கள் லீக் ஆவதற்கு வாய்ப்பு இருக்கு.) 30% மட்டுமே, ஆன்லைன் மோசடியாளர்கள் ஹாக் செய்கிறார்கள்(பண மோசடி, உங்கள் அக்கவுண்டில் இருந்து பல ‘கெட்ட மெயில்' உங்கள் மெயில் முகவரி புத்தகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்புதல், போன்ற பாதிப்புகள் இருக்கின்றன). அதனால, எல்லாவற்றிலும் கொஞ்சம் கவனமாக இருங்க.

மெயில் நுழைவு சொல்லை அறிய எந்த மென்பொருளும் இல்லை. சில இணைய தளங்களிலும், மெயில்களிலும் இப்படி பார்த்து இருக்கலாம். இந்த மெயில் முகவரிக்கு, ”நீங்கள் ஹாக் செய்ய விரும்பும் மெயில் ஐடி மற்றும் உங்கள் பாஸ்வேர்டை அனுப்புங்கள், நாங்கள் ஹாக் செய்து தருகிறோம்” என்று. உங்க பாஸ்வேர்டை எந்த காரணம் கொண்டும் தராதீர்கள். இவை உங்கள் மெயில் முகவரியை ஹாக் செய்திட நீங்களே உத்தரவு தருகிற மாதிரி.கடைப்பிடிக்க வேண்டியவை:

1) கடவு சொல்லை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றுங்கள்.

2) “Hint Question" - கொஞ்சம் கஷ்டமாக உபயோகிக்கவும். உங்களுக்கு மட்டும் இல்ல, யார் வேண்டுமானாலும், உங்கள் மெயில் முகவரியைக் கொடுத்து விட்டு, ”Forgot My Password" என்று கிளிக் செய்தால், இந்த “Hint Question"ஐ தான் அவர்களிடமும் கேட்கும். உங்க செல்ல பேரு என்ன, உங்க அம்மா பேரு என்ன, பிறந்த ஊர் என்ன, பிடித்த நிறம்? இப்படி சில்லி தனமாக கேள்வி இருந்தா, உங்க நண்பர்கள், தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் ஒரு யூகத்தில் பதில் அளித்து ஹாக் செய்திட முடியும்.)

3) கண்டிப்பாக “Secondary Mail" உபயோகிக்கவும். ”Secondary Mail" - இருந்தால், Hint Question கேட்காது, Forgot my password கிளிக் செய்தால், உடனே ஒரு activation link உங்க மெயில் ஐடிக்கு வந்துவிடும். யாரும் ஹாக் பண்ண முயற்சி செய்தாலும் தெரிந்து விடும்.


4) குறைந்தது 4 மெயில் ஐடி வைத்துக்கொள்ளுங்கள்.
 • ஒரு மெயில் ஐடி - யாருக்கும் கொடுக்கதீர்கள். ஆன்லைன் பாங்கிங் போன்ற மிகவும் முக்கியமான செயலுக்கு மட்டுமே உபயோகிக்கவும். மற்ற மூன்று மெயில் ஐடிக்கும் “Secondary mail id"- ஆக இந்த ஐடியை கொடுக்கவும். (யாருக்கும் தெரியாம ரகசியமாக வைச்சுக்கோங்க)
 • இரண்டாவது மெயில் ஐடி - நண்பர்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக உபயோகிக்கலாம்.
 • மூன்று - நம்பகமான தளங்கள், சோசியல் நெட்வொர்கிங் தளங்கள் (ஆர்குட், மைஸ்பேஸ்) போன்றவற்றில் சேருவதற்கு உபயோகிக்கலாம். அலுவலக பயன்பாட்டிற்காக உபயோகிக்கும் மெயில் ஐடியை சோசியல் நெட்வொர்கிங் தளங்களில் சேர்வதற்கு உபயோகிக்க வேண்டாம். (இப்படி தான் ஒரு முறை, ஆர்குட்டில் “இன்விவைட்” என்று இருந்தது, அதை கிளிக் செய்ததால், என்னை அறியாமல் என் ஆசிரியருக்கு ஆர்குட்டில் இருந்து “இன்விடேசன்” சென்று விட்டது. )
 • நான்கு - இந்த முகவரியை ”குப்பை” (spam) மெயிகளுக்காக மட்டும், உபயோகிக்கவும். (அப்டினா? ஆசை யார விட்டது, பணம் சம்பாதிக்கலாம், உங்க மெயில் ஐடி தாங்க, அனுப்பி வைக்கிறோம் / இந்த தளத்தில் சேர்ந்தால் தான், இந்த தளத்தைப் பார்வை இடலாம், இதியாத்தி... இதியாத்தி..... இப்படிதெரியாத தளங்களில் எல்லாம் இந்த முகவரியை கொடுங்க. குப்பை மெயில் வந்தாலும், ஒரு பிரச்சனையும் இல்ல.


ஜிமெயில் அக்கவுன்ட் வைத்திருந்தால், அக்கவுண்ட் பக்கத்திற்கு செல்லவும். யாஹூ உபயோகிப்பளர்கள், தங்கள் மெயிலில் உள்நுழைந்த பின், மேலே ”sign out", அருகில் ”My Account" கிளிக் செய்து, தங்கள் மெயில் செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம்.

5 Comment(s)

 1. Anonymous // 8/17/2008 03:13:00 PM  

  nalla eluthi irukkenga. puriyumpadi irunthathu. nandri

 2. கிரி // 8/17/2008 05:14:00 PM  

  //கண்டிப்பாக “Secondary Mail" உபயோகிக்கவும். ”Secondary Mail" - இருந்தால், Hint Question கேட்காது, Forgot my password கிளிக் செய்தால், உடனே ஒரு activation link உங்க மெயில் ஐடிக்கு வந்துவிடும்.//

  நல்ல யோசனை நன்றி.

 3. Anonymous // 8/18/2008 12:35:00 AM  

  மிகமிக நல்ல பதிவு.

  அத்தோடு இவையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  1. நண்பர்களுக்கும் வெளியார்க்கு குடுக்கும் இமெயிலில் உங்க உண்மை Date of birth ஐ குடுக்காதீங்க. ஏன்னா இது மூலமா பாஸ்வேர்ட்ட ஈசியா மாத்தலாம்.

  2. நெட் கபேல நெட் பாக்கற ஆளா நீங்க?
  உங்க பாஸ்வேர்ட் எல்லாத்தையும் ஒரு நோட்பேட்டில் எழுதி வச்சுக்கோங்க. கவனம் - பாஸ்வேர்ட் மட்டுமே. அதுவும் குழப்பி. உதாரணத்திற்கு உங்க பாஸ்வேர்ட் 123456 ன்னா, 456123 அப்படீனு வச்சி பின்னாடி காபி பேஸ்ட் பண்ணும்போது பின்னாடி இருக்கற 3 டிஜிட்ட முதல்ல பேஸ்ட் பண்ணி மத்தத பின்னாடி பண“ணலாம்.
  யுசர் நேம மனதிலேயே வச்சுக்கோங்க.
  இது ஏன்னா யாராச்சும் Key Loggers இன்ஸ்டால் பண்ணி வச்சிருப்பாங்க.
  இல்லேனா Anti Key Loggers அப்ளிகேஷன உங்க பென் ட்ரைவில வச்சிக்கோங்க. இது 500kb தா வரும். இலவசமாக கிடைக்கும்.

  வாழ்த்துக்கள்
  சுபாஷ்

 4. ஜீனோ கார்த்திக் // 8/18/2008 11:57:00 PM  

  சுபாஷ், வருகைகும் நல்ல ஆலோசனைகும் நன்றி.

 5. ஜீனோ கார்த்திக் // 8/18/2008 11:58:00 PM  

  @கிரி & அர்ஜூன், நன்றி.

CO.CC:Free Domain