ஆம், என்கிறது கூகிள். கூகிள் சமீபமாக எடுத்த கணக்கெடுப்பின் படி, 52.4 சதவீத இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகிப்பாளர்கள் ஆன்லைன் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்கிறது. ஏனெனில், இன்டர்நெட் எக்ஸ்பளோரர், ஃபயர்ஃபாக்ஸை போல அடிக்கடி அப்டேட் ஆவது இல்லை. ஆகையால், தினம் தினம் புதிதாய் உருவாகிடும் வைரஸ் / செக்குரிட்டி ஹோல்களிடமிருந்து, இந்த இன்டர்நெட் எக்ஸ்பளோரரால் அதனையும் கணினியையும் பாதுகாத்து கொள்ள முடிவதில்லை. மேலும் பல வைரஸ்/ட்ரோஜன் புரோகிராம்கள் இன்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே செயல்படும் என்பது கூடுதல் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. கீழே உள்ள படத்தைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.


ஆதாரம் & மூலம்: கூகிள் வலைப்பூ.


இணைய உலாவியில், ஃபயர்ஃபாக்ஸ் முதலிடத்தையும், இண்டர்நெட் எக்ஸ்பளோரர் கடைசி இடத்தையும் பிடித்திருப்பதைப் படத்தில் பார்க்கலாம். ஆகையால், கூகிள் ஃபயர்ஃபாக்ஸைத் தத்தெடுத்து பரப்பி வருகிறது.

ஃபயர்ஃபாக்ஸை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

ஃபயர்ஃபாக்ஸின் நன்மைகள்:

1) Tabbed Browsing

பத்து இணைய தளம் திறக்கும் போது, தனித்தனி திரையாக திறக்காமல், ஒரே திறையில் பல Tab-களில் திறக்கலாம்.

2) Popup Blocking - சில இணையதளங்கள் திறந்திடும் போது அதனுடன் ஒன்றிரண்டு பாப் அப் திறை தேவையில்லாமல் திறந்து தொல்லை கொடுக்கும். ஃபயர்ஃபாக்ஸ் பாப் அப் திறைகளை தனிச்சையாக தடுத்திடும்.

3) மாதம் ஒரு முறை அப்டேட் ஆகிவிடும்.

4) Easy History cleaner - ப்ரொவ்ஸிங் ஹிஸ்டரியை அழிக்க தனி மென்பொருள் தேவை இல்லை. ஃபயர்ஃபாக்ஸ் மூடிடும் போது அனைத்து ஹிஸ்டரி, குக்கீ அழியும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளலாம்.

5) Integrated Search Engine - கூகிள், யாகூ, லைவ், ஆகிய தேடு பொறிகள் ஃபயர்ஃபாக்ஸிலேயே இருக்கும்.

6) Download Manager - கோப்புகள் தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும் போது, இணையத் தொடர்பு துண்டித்துப் போனால் கூட இணைப்பு வந்தவுடன் தொடர்ந்து தரவிறக்கம் செய்யும்.

7) Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.

இன்னும் பல நன்மைகள் உள்ளன. ஒருமுறை உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள், உங்களுக்கே தெரியும் பல வித்தியாசங்கள்.

ஃபயர்ஃபாக்ஸை தரவிறக்க.....

7 Comment(s)

  1. அகிலா // 8/07/2008 02:10:00 AM  

    நல்ல எழுதுறீங்க. அண்ணா பல்கலைகழக மாணவரா இருந்து கொண்டு .. தமிழில் நீங்கள் எழுவது ஆச்சர்யம் தருகிறது. வாழ்த்துக்கள்

  2. வாழ்க தமிழ் // 8/07/2008 02:25:00 AM  

    வணக்கம் பாபு ,
    வாழ்க தமிழ்க்கு தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.

  3. பாபு // 8/07/2008 02:37:00 AM  

    வருக, வருக அகிலா & வாழ்க தமிழ்!


    @அகிலா, ஏன் அண்ணா பல்கலைகழக மாணவர்னா தமிழில் எழுதக்கூடாதா என்ன? அண்ணா பல்கலைகழகம் தமிழகத்தில் தானே இருக்கிறது.

  4. Anonymous // 8/10/2008 05:57:00 PM  

    //அண்ணா பல்கலைகழக மாணவரா இருந்து கொண்டு .. தமிழில் நீங்கள் எழுவது ஆச்சர்யம் தருகிறது.//

    என்ன அகிலா!!!!

    அண்ணா பல்கலைகழக மாணவர்களெல்லாம் வங்காள மொழியிலா எழுதுகிறார்கள்.

    உங்களது பேச்சே வியப்பாக இருக்கிறது. நீங்க என்ன ஆறாம் கிளாஸா?

  5. Jafar Safamarva // 8/14/2008 08:25:00 PM  

    //Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.//

    நண்பரே! தமிழ் மாறவில்லையே. பழைய வெர்ஷன் என்றல்லவா சொல்கிறது.

  6. பாபு // 8/14/2008 10:23:00 PM  

    Jafar Safamarva அவர்களே!,
    தமிழ் ஆட்-ஆன், ஃபயர்ஃபாக்ஸ் 2.0-இல் மட்டுமே வேலை செய்யும். 3-இல் வேலை செய்யாது. ஆகையால் தான் உங்களுக்கு அப்படி செய்தி வருகிறது. இங்கே கொடுக்கபட்டுள்ள லிங்கில் இருந்து ஃபயர்ஃபாக்ஸை தரவிறக்கி நிறுவவும்.

  7. Me // 2/21/2009 03:45:00 PM  

    கூகிள் குரோம் பற்றிய உங்களது கருத்து ??

CO.CC:Free Domain