ஆகா நூறு கோடி ரூபாய் எனக்கே எனக்கா?

By: ஜீனோ கார்த்திக் | 8/01/2008 12:07:00 AM | | 0 Comment(s) »

"இமெயில் லாட்டரியில் நூறு கோடி டாலர் உங்களுக்கே விழுந்துள்ளது. உலகத்தில் உள்ள 600 கோடி பேரில் நீங்களே அதிஸ்டசாலி."அல்லது"நான் ஒரு ஆனதை, எனது குடும்பத்தினர் அனைவரும் ஒரு விபத்தில் (பெரும்பாலும் விமான விபத்தாக தான் இருக்கும்) இறந்து விட்டனர். அவர்களுடைய சொத்து எல்லாம் இந்தியாவில் இருக்கிறது. எனக்கு திருமணம் ஆகவில்லை. என்னை கல்யாணம் செய்து கொண்டால், எனது சொத்துக்கள் அனைத்தும் உங்களுக்கே. நீங்கள் விரும்பினால் நான் என்னுடைய புகை படம் அனுப்புவேன். உங்கள் முடிவுக்காகக் காத்திருக்கிறேன்."


அல்லது


"நான் ஒரு பேங்க் மேனேஜர். என்னுடைய வங்கியில் கேட்பாரற்று 10 லட்சம் டாலர் உள்ளது. நீங்கள் ஒத்துழைத்தால் அந்த பணத்தை எனது பெயருக்கு மாற்றி விடுவேன். அதில் 50% உங்களுக்கு தான்"

இத்யாத்தி......இத்யாத்தி......இத்யாத்தி......இத்யாத்தி......


பலருக்கும் இப்படி பட்ட மெயில்கள் வந்து இருக்கும். இப்படி மெயில் அனுப்புவர்கள் பெரும்பாலும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களே. அவர்கள் தான் ஆன்லைன் மோசடிகளில் மன்னர்கள்.

அவர்களுடைய முக்கிய நோக்கமே உங்களது ஆன்லைன் பேங்க் தகவல்களை பெற்று, அதை வைத்துக் கொண்டு உங்கள் பங்கில் இருந்து பணம் எடுப்பது, வாங்காத ஒரு பொருளுக்காக நமது கிரிடிட் கார்டில் பணம் எடுப்பது போன்ற மோசடிகளில் ஈடுபடுவது தான். சிலரை தங்கள் நாட்டுக்கு அழைத்து அவர்களிடம் பணம் பெற்ற பின் கொலை செய்யவும் தயங்க மாட்டர்கள்.


இது நைஜீரியா அரசால் அங்கரிக்கப்பட்ட சுய தொழில் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய கூடுதல் தகவல். ஆகையால் இது போல மெயில்கள் வந்தால் கண்ணை மூடிக்கொண்டு delete செய்து விடுங்கள்.


இதை எப்படி தடுக்க?
எதாவது ஒரு இணையத்தளத்தில் (forum) நம் மெயில் முகவரியை கொடுத்து இருப்போம். அதில் இருந்தே அவர்கள் நம் மெயில் முகவரியை பெறுகின்றனர்.
அதனால், ஒரு முக்கியமான ஒரு மெயில் முகவரியைப் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். முக்கியமான நண்பர்கள், வங்கி, அலுவலக பயன்களுக்கு அதை உபயோகிக்கவும்.

மேலும் ஒரு மெயில் முகவரியை கொண்டு ஆர்குட், forum, சாட்டிங், போன்ற இணைய தளங்களில் உபயோகிக்கவும்.

தெரியாத / நம்பிக்கை இல்லாத இணையதளங்களில் உங்கள் வீட்டு முகவரி, ஏன் உங்கள் சொந்த பெயரைக் கூட கொடுக்க வேண்டாம். இப்படி செய்தால், ஆன்லைன் மோசடி மன்னர்களின் வலையில் சிக்காமல் இருந்து தப்பிக்கலாம்.இதையும் படிங்க!

0 Comment(s)

CO.CC:Free Domain