adsforindians விளம்பர நிறுவனம் நம்பகமானதா?

By: ஜீனோ கார்த்திக் | 8/27/2008 10:12:00 PM | | 2 Comment(s) »

 சமீபத்தில் நான் என்னுடைய தளத்தில் விளம்பரம் போடலாம் என்று முடிவு செய்தேன்.  கூகிள் தமிழ் தளங்களை அனுமதிப்பது இல்லை என்பதால், வேறு நல்ல நிறுவனங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்டது ஆட்ஸ்ஃபார் இந்தியன் நிறுவனம்.  அவர்களிடம் மெயில் மூலம் உரையாடியதையே கீழே தொகுத்துள்ளேன்.  
என்னுடைய கேள்விகள் எல்லாம், சாதாரண எழுத்துருவிலும்,  அவர்களுடைய பதில் நீல நிறத்திலும் இருக்கிறது.

 1) முதல் கேள்வி:
Hello, i am an Indian based website admin.  I want to place ad in my Tamil
website having 400 page(on average) view per day.  Will you permit to post your ad on
Tamil website.


Sorry!  We accept sites with 500 to 25k page views per day.
In case we need huge traffic for new major ad campaigns, we will contact you.
 
 
 2) இரண்டாவது கேள்வி:
 
I have more confusion in your system,

In advertiser column, you have said that, pay only Re.1.

In publisher column, you said that, you will pay Rs.1.5 to 3 rs.  Why this
conflict?  How can you pay this amount to publishers if you dont get from
advertisers.
The rate Rs.1 is applicable for 50 clicks per day target to India only. This is to attract small advertisers to try our network. Our rates go higher depending on the daily click volume and targeting. 

 
3) மூன்று: 

Being a ad company, why you have placed google adsense ad in you webpage
and even in your index.

We placed Google ads to attract their advertisers to our network.
 
 
4) நான்கு:
Are you scam?  If not, please give me one or two Indian based website
owners who got payment from you.
 
This is not a scam. We mainly get new publishers/advertisers through free referrals.
 

எனது கேள்வி இது தான், ஒரு விளம்பரம் செய்யும் நிறவனம், தங்கள் தளத்தின் முகப்பிலேயே கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரம் வெளியிடுவதற்குக் காரணம் என்ன?  அவர்கள் சம்பாதிபதற்காக இப்படி செய்கிறார்களா? அல்லது ஏமாற்றுகிறார்களா? என்பது தெரியவில்லை.  மேலும் அவர்களுடைய விதிமுறைகள்,  சலுகை எல்லாம் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது.  இதுவரை ஆட்ஸ்ஃபார் இந்தியன் நிறுவனத்தில் சேர்ந்து,  பயன்பெற்றுள்ளீர்களா?   மேலும் அவர்களுடைய பிபிசி (ppc) எப்படி இருக்கிறது? (பின்னூட்டமிடவும்.)

2 Comment(s)

 1. Tech Shankar // 8/30/2008 10:53:00 AM    எது எப்படியோ முன்னர் நான் இந்த நிறுவனத்தின் விளம்பரங்களை எனது வலைப்பூவில் வைத்திருந்தேன். ஒரு க்ளிக்குக்கு 3 ரூபாய். குறிப்பிட்ட காலத்தில் 563 /- கடந்து கொண்டிருக்கும்போது எனக்கு மின்னஞ்சல் செய்தார்கள்.

  "உங்களது வலைப்பூவிற்கு ஒரு நாளைக்கு 2000 காண்போர்களாவது வருகை தந்தால்தான் ஒரு கிளிக்கிற்கு 3 ரூபாய். இல்லாவிடில் 2 ரூபாய். இந்த நடைமுறைக்குச் சம்மதம் எனில் நிறுவனத்துடனேயான நட்புறவைத் தொடரவும். இல்லாவிடில் இதுவரையில் கிடைத்துள்ள துகையான 563/- ஐ உங்களது வங்கிக்கணக்கில் செலுத்திவிடுகிறோம்" - எனத் தகவல் கொடுத்தார்கள்.

  அதன் பிறகு நிறைய மின்னஞ்சல் போட்டேன். பதில் இல்லை. ஆனால் திடீரென்று ஒரு நாள் எனது வங்கிக்கணக்கிற்கு 563/- செலுத்தப்பட்டிருந்தது.

  ஆனால் ஒரு கிளிக்கிற்கு 3/- என்பது மிகமிகக் குறைந்த துகை. நான் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 13 கிளிக்குகளும், குறைந்த பட்சமாக 1 கிளிக்கும் பெற்றேன்.

  ஆனால் தமிழ் வலைப்பதிவு அன்பர்களின் காண்போர்களின் (யுனிக் விசிட்டர்கள்) எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான். அதிகபட்சம் 756 யுனிக் விசிட்டர்கள் ஒரே நாளில் எனது வலைப்பூவிற்கு வருகை தந்தார்கள். ஒட்டு மொத்த அதிகபட்ச ஹிட்களின் எண்ணிக்கையாக எனக்கு 1786 ஹிட்கள் / ஒரே நாளில் கிடைத்தது.

  மற்றபடி 2000 ஹிட்கள் / நாள் என்பதெல்லாம் அதிகமோ அதிகம்.

  தமிழ் மொழியைப் பயன்படுத்தி கூகிள் முதலிய தேடுபொறிகளின் வாயிலாகத் தேடுபவர்களின் (வலைப்பூ வைத்திருக்காதவர்களும்) எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே, நாம் மிக அதிகப்படியான எண்ணிக்கையில் ஹிட்கள் பெற இயலும்.

 2. Anonymous // 8/31/2008 06:04:00 PM  

  Let's unite on http://www.tamiljunction.com and create a lively online Tamil community and find new Tamil friends worldwide.

  http://www.tamiljunction.com is an effort to show the mightiness of Tamil people.

CO.CC:Free Domain