சென்ற பதிவில் “வாழ்த்து அட்டை” தயாரிக்கும் மென்பொருளைப் பற்றிக் கூறியிருந்தேன் அல்லவா. அந்த மென்பொருளுக்கான மேலும் சில வண்ண டெம்ப்லேட்கள் இங்கே உள்ளன.
டெம்ப்லேட்#1
டெம்ப்லேட்#2
இந்த இரண்டையும் தரவிறக்கம் செய்து, zip கோப்புகளாகவே வைத்துக் கொள்ளுங்கள். பின், ”போடோ கார்ட் மேக்கர்” மென்பொருளைத் திறந்து, ”Import Template" என்பதைத் தேர்வு செய்து, மென்பொருளில் இறக்கிக் கொள்ளுங்கள்.
வாழ்த்து அட்டை தயாரிக்க மேலும் சில டெம்ப்லேட்கள்
By: ஜீனோ கார்த்திக் | 12/31/2008 07:37:00 PM | multimedia, Software | 0 Comment(s) »வணக்கம், நண்பர்களே! இந்த வலைப்பூவிற்குத் தாங்கள் அளித்து வரும் ஆதரவு கண்டு அதிசயித்துப் போயுள்ளேன். இன்றிலிருந்து எனது சொந்த டொமைனில் எழுதத் திட்டமிட்டுள்ளேன். இந்த வலைப்பூவின் முகவரி http://tamil-software.blogspot.com என்பதை http://tamiltech.indioss.com என்று மாற்றியுள்ளேன். பழைய முகவரியும் சில காலங்களுக்கு வேலை செய்யும். சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!
By: ஜீனோ கார்த்திக் | 12/29/2008 10:30:00 PM | இணையம், ஃபயர்பாக்ஸ் | 5 Comment(s) »இந்த நீட்சியை நிறுவிய பிறகு, படத்தில் காட்டியது போல் ”Open this link in IE Tab" என்ற ஆப்சன் சேர்ந்து விடும். ஆகையால் இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே திறக்கும் இணைய தளங்களையும் ஃபயர்பாக்ஸிலேயே பார்வையிடலாம்.
”கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! ” - “நெருப்பு நரி இருப்ப ஐ.ஈ கவர்ந்தற்று!”

மேற்கொண்டு நான் சொல்வதை விட, தாங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது அதிகம் அறியலாம்.
மாதிரிப் படங்கள்:
நீங்களே செய்யலாம் "வாழ்த்து அட்டை"
By: ஜீனோ கார்த்திக் | 12/29/2008 12:52:00 AM | கணினி குசும்பு, மல்டிமீடியா | 7 Comment(s) »”ஏன் நாமே ஒரு வாழ்த்து அட்டை தயாரிக்கக்கூடாது?” என்று எண்ணி ”போட்டோஷாப்பில்” ஆரம்பித்தேன். அதில் உருவாக்கிய அட்டையில் ஒரு நேர்த்தி கிடைக்கவில்லை.
புத்தாண்டுக்கு, நீங்களே செய்த வாழ்த்து அட்டையை நண்பர்களுக்கு அனுப்பி ஆச்சர்யப்படுத்துங்கள்.

http://getitfreely.co.cc/content/unique-greeting-card-maker
ஜிமெயில் மற்றும் யாகூவில் கடவுச் சொல் மாற்றுவது எப்படி?
By: ஜீனோ கார்த்திக் | 12/26/2008 11:08:00 PM | தெரிந்ததும் தெரியாததும், ஜிமெயில் | 4 Comment(s) »அடிக்கடி என்னிடம் கேட்கப் படும் கேள்வி இது. இன்று கூட எனது நண்பர் கோபி கேட்டார். இதையே ஒரு பதிவா எழுதலாமே என்று தோணியது.
ஜிமெயிலில் கடவுச் சொல் மாற்ற கூகிள் பயனர் கணக்குப் பக்கத்திற்குச் செல்லவும்.
https://www.google.com/accounts/
"Personal Setting"--> "Setting"---> "Change Password"
யாகூவில் கடவுச் சொல் மாற்ற யாகூ மெயிலில் உள்நுழையவும். "My Account" என்பதைத் தேர்வு செய்து மாற்றிக் கொள்ளவும். ("Sign Out" அருகில் இருக்கும்)
MSOffice 2007 கோப்புகளை ஆபிஸ் 2003-ல் திறந்திட!
By: ஜீனோ கார்த்திக் | 12/23/2008 11:46:00 AM | தெரிந்ததும் தெரியாததும், மென்பொருள் | 5 Comment(s) »இதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். (27mb)
http://getitfreely.co.cc/content/open-ms-office-2007-files-ms-office-2003
2) இரண்டாவது வழி:
MS office 2007-ல் சேமித்திடும் போதே Save என்பதைத் தேர்வு செய்யாமல், Save As---> MS Office 97 - 2003 என்பதைத் தேர்வு செய்தால், ".doc" என்றே Save ஆகும். ஆகையால் MS Office 2003-ல் அதை திறக்கலாம்.
புதிய பிளாக் டிராக்கர் & கவுண்டர்.
By: ஜீனோ கார்த்திக் | 12/21/2008 06:16:00 AM | blogging, இணையம் | 2 Comment(s) »நான் பல webcounter, tracker சேவைகளை உபயோகித்துள்ளேன். அதில் getclicky நிறுவனம் தரும் சேவை எனக்கு பிடித்திருக்கிறது. நீங்களும் உபயோகித்துப் பாருங்களேன்.
http://www.getclicky.com/
இவர்கள் முதல் முப்பது நாள் மட்டும் எல்லா வசதிகளையும் உபயோகித்துக் கொள்ளலாம்(trial). மேலும் உபயோகிக்க basic கணக்கைத் தேர்ந்தெடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். “Outgoing link & Spy" என்ற இரு வசதிகளை மட்டும் உபயோகிக்க இயலாது.

லினக்ஸ் பிரியர்களே!
By: ஜீனோ கார்த்திக் | 12/18/2008 08:18:00 PM | கட்டற்ற மென்பொருள் | 6 Comment(s) »http://www.opensuse.org
நான் தரவிறக்கம் செய்யத்தொடங்கி விட்டேன். சென்னை வாசிகள் என்னிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். :-)
Opensuse Screenshots:
விண்டோஸ் பயனர்கள் ஒருமுறை உபயோகித்துப் பாருங்களேன், உங்களுக்கே வேறுபாடு தெரியும்.
யாரைத்தான் நம்புவதோ? | இணையம் (தெ.தெ-4)
By: ஜீனோ கார்த்திக் | 12/17/2008 11:05:00 PM | இணையம், ஃபயர்பாக்ஸ், தெரிந்ததும் தெரியாததும் | 0 Comment(s) »
ஸ்பேம் தொல்லை இனிமே இல்லை ( ஜிமெயில் - தெரிந்ததும் தெரியாததும்-2)
By: ஜீனோ கார்த்திக் | 12/15/2008 10:00:00 AM | ஜிமெயில் | 1 Comment(s) »
இணையத்தில் எந்த வலைத்தளத்திற்குச் சென்றாலும் பதிவு செய்ய வேண்டியதுள்ளது. பல இணைய தளங்களை நம்ப முடிவதில்லை. அதே நேரம், நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை. சில இணையதளங்கள் தங்கள் பயனர்களின் மெயில் ஐடியை விற்றுவிடுகின்றனர், இதனால் ஸ்பேம் தொல்லைகள் தாங்கமுடிவதில்லை. சிலர் இணையத்தில் பதிவு செய்வதற்கு என்றே ஒரு ஐடி வைத்திருக்கிறார்கள். அதிலும், என்ன பிரச்சனை என்றால், எதைப் படிக்க எதை விட என்று தெரியாமல், நல்ல மெயில்களையும் படிக்காமலேயே விட்டுவிடுகின்றனர்.
வழிமுறைகள்:
1) ஃபயர்ஃபாக்ஸ் பயனாளர்கள் கீழுள்ள வலைப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து ஃபயர்ஃபாக்ஸில் சேர்த்துக் கொள்ளவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8257
2) xoopit தளத்திற்குச் செல்லவும்.
3.) தங்களது ஜிமெயில் முகவரி மற்றும் ஜிமெயில் கடவுச்சொல்லைக் கொடுத்துப் பதியவும்.
4.) மறுமுறை தங்கள் ஜிமெயிலில் xoopit சேர்ந்து கொள்ளும்.
பயன்படுத்துவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் தெரிவிக்கவும்.
குறிப்பு: இது ஃபயர்ஃபாக்ஸ் பயனாளர்களுக்கு மட்டும் ! !
மாதிரிப் புகைப்படம்:
நட்புடன்,
ஸ்ரீ..
http://srivathsan.wordpress.com
ஜிமெயில் - செக்யூர் லாக் ஆன் - தெரிந்ததும் தெரியாததும் (1)
By: ஜீனோ கார்த்திக் | 12/14/2008 11:54:00 AM | ஜிமெயில் | 5 Comment(s) »இலவச குறுந்தகவல் (sms) அனுப்பும் மென்பொருள்
By: ஜீனோ கார்த்திக் | 9/19/2008 09:35:00 AM | இணையம், இலவசம், குறுந்தகவல் | 0 Comment(s) » வெளி நாடுகளுக்கும், உள்நாட்டு நண்பர்களுக்கும் இனி இஷ்டம் போல் குறுந்தகவல்கள் ”சிக்கா” மென்பொருளைக் கொண்டு அனுப்புங்க. இனி எந்த இணைய தளத்திற்கும் செல்ல தேவை இல்லை. உங்கள் டெஸ்க் டாப்பில் இருந்தே அனுப்புங்க. அதை தரவிறக்கம் செய்ய இங்க போங்க.
http://getitfreely.co.cc/content/chikka-free-international-sms-software
இந்த பக்கத்தில் கீழே தரவிறக்கம் செய்யும் லிங் உள்ளது. இதில் அனுப்பும் குறுந்தகவலில் விளம்பரம் கிடையாது என்பதே இந்த மென்பொருளின் சிறப்புகள்.
நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா? அறிவது எப்படி?
By: ஜீனோ கார்த்திக் | 9/05/2008 10:18:00 AM | இணையம், மின்னஞ்சல், ஹாக்கிங் | 6 Comment(s) »செய்முறை விளக்கம்:
1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2). இப்போது, www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.
நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.
செஞ்சு பாருங்க, சந்தேகம் என்றால் கேளுங்க.
உங்கள் பிளாக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
By: ஜீனோ கார்த்திக் | 9/01/2008 02:31:00 PM | blogging, domain | 1 Comment(s) »இந்த பதிவில் Co.CC மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம். முதலில் நீங்கள் Co.CC இல் ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும். கணக்கை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றி சென்ற பதிவில் பாருங்கள். ஒரு புது கணக்கு ஆரம்பித்த பிறகு, மெனுவில் உள்ள Refferals-ஐ சொடுக்கவும். பிறகு, அங்கு ரெபரல் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க சொல்லும். இப்போது அதே இமெயில் ஐடி கொண்டு, ஒரு ரெபரல் அக்கவுண்ட் உருவாக்கி, உங்கள் கணக்கில் உள் நுழையவும். அங்கு, Get Banners என்று இருக்கும், அதில் உங்களுக்கு பிடித்த banner-ஐ தேர்ந்து எடுத்து, உங்கள் வலைப்பூவில் வெளியிடவும்.
வலைப்பூ இல்லாதோர், your personalized referral link என்ற பெட்டியில் இருக்கும் லிங்கை வெட்டி, உங்கள் இமெயில் சிக்நேச்சருக்குக் கீழ் ஒட்டவும். இதன் பயன்கள் அதனையையும் சொன்னால், கண்டிப்பாக அவர்கள் உங்கள் ரெபரல் லிங்கை சொடுக்கி ஒரு புதிய அக்கவுண்டைத் தொடங்குவார்கள். இப்படி ஒவ்வொரு புதிய சைன் அப்புக்கு 0.1 usd கிரிடிட் செய்வார்கள். 10 டாலர் சேர்ந்த பிறகு ஒரு புது .காம் டொமனோ, அல்லது வேறு எதாவது வாங்கி கொள்ளுங்கள். (நானும் அதுக்கு தான் வெய்டிங்).
Co.CC-இன் பயன்கள்:
1. இலவச டொமைன் நேம் (உங்கள் பிளாக்கிற்கு - பிளாக்பெயர்.blogspot.com என்பதை பிளாக்-பெயர்.co.cc என்று சுருக்கிக் கொள்ளலாம். (மேலும் விவரங்கள்)
2. மேலும், சென்ற பதிவில் கூறியது போல், கூகிள் ஆப்ஸ் மூலம் 500 இலவச மெயில் ஐடி கிடைக்கும்.
இலவசமாக உங்கள்பெயர்@உங்கள்பெயர்.com என்று இமெயில் ஐடி வேண்டுமா?
By: ஜீனோ கார்த்திக் | 9/01/2008 09:23:00 AM | இணையம், கூகிள் | 1 Comment(s) »எனது இமெயில் நுழைவு பக்கத்தைப் பார்க்கவும். உங்களுக்கே புரியும்.
நான் சொந்த உபயோகத்திற்காக, Co.CC-இன் இலவச டொமன் நேம் கொண்டு, செட் செய்துள்ளேன். இதை எப்படி செட் செய்வது என்பதைக் குறித்து, எனது ஆங்கில தளத்தில் வெளியிட்டுள்ளேன். அதில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
http://getitfreely.co.cc/content/free-yournameyournamecocc-mail-id
”.காம்” செட் செய்ய கஷ்டமாக இருந்தால் என்னை “tamil @ dearbabu.co.cc" என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். இங்கேயே பின்னூட்டம் இட்டாலும் சரி, முடிந்த வரை உதவுகிறேன்.
சீரியஸாக பிளாக் எழுதுகின்றீர்களா?
By: ஜீனோ கார்த்திக் | 8/31/2008 10:10:00 AM | blogging, domain | 6 Comment(s) »இங்கு எப்படி செட் செய்வது என்பது பற்றி பார்ப்போம். விளக்கம் முழுவதும் தமிழ் டாஷ் போர்ட்டை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் டாஷ் போர்ட்டை மாற்ற இங்கே சொடுக்கவும்.
CO.CC வழங்கும் இலவச டொமன் நேமில் கூட செட் செய்யலாம். ஆனால் சீரியஸாக பிளாக்கிங் செய்ய ஆரம்பித்து விட்டால், வருடத்திற்கு ஆறு டாலர் பெரிய தொகையாக இருக்காது என்று நினைக்கிறேன். இலவச டொமன் நேம் கொண்டு, சென்ற பதிவில் கூறியிருப்பது போல கூட url forwarding செய்யலாம். அதாவது, பிளாக்-பெயர்.co.cc என்று கொடுத்தால், உங்கள் வலைப்பூ திறக்கும். இதை செட் செய்வது மிகவும் எளிது. அல்லது CO.CC-இல் DNS setting-ஐ தேர்ந்து எடுத்தாலும், கீழே சென்னதைப் போல செட் செய்யலாம்.
இப்போது, டொமன் நேம் எப்படி செட் செய்வது என்று பார்ப்போம்.
1). முதலில் ஒரு டொமன் நேம் வாங்கிக் கொள்ளவும்.(www.name.com or www.maddogdomains.com) அதில் DNS setting-ல், CNAME தேர்ந்து எடுத்து, www.பிளாக்-பெயர்.com - கொடுத்து, value என்பதற்கு நேராக “ghs.google.com” என்று கொடுக்கவும். இது செட் ஆகி, அப்டேட் ஆக குறைந்தது 24 மணி நேரம் ஆகும். இனி செய்ய வேண்டியது எல்லாம், பிளாக்கரில் தான்.
2)டாஷ் போர்ட்டில் நுழையவும். அமைப்புகள் --> வெளியிடுதல் சொடுக்கவும்.
3) ”தனிப்பயன் டொமன்” சொடுக்கவும்.
4) ”முன்பே டொமைன் உள்ளதா? மேம்பட்ட அமைப்புகளுக்கு மாறுக”- ஐ சொடுக்கவும். இப்போது நீங்கள் வாங்கிய டொமன் பெயரைக் கொடுத்து(.com/net / .co.cc என்ற எக்ஷ்டன்ஸனோடு), அமைப்பைச் சேமிக்கவும்.
24 மணி நேரத்திற்குப் பொறுமைக் காக்கவும். பிறகி, “உங்கள்-பிளாக்.com", என்று தட்டினால், உங்கள் பிளாக் திறக்கும். மேலும், உங்கள் பழைய பிளாக் பெயரைத் தட்டினாலும், உங்கள் பிளாக் திறக்கும்.
(எ.கா: எனது புதிய வலைப்பூ www.radioindia.co.cc)
தமிழில் பிளாக்கர் டாஷ்-போர்டை மாற்ற!
By: ஜீனோ கார்த்திக் | 8/31/2008 09:00:00 AM | blogging, தமிழ் | 2 Comment(s) »பிளாக்கர் தமிழிலும் சேவை தருகிறது. உங்கள் டாஷ் போர்டை தமிழில் மாற்ற http://draft.blogger.com - ற்குச் செல்லவும். அங்கு தமிழ் மொழியைத் தேர்வு செய்யவும். மேலும் "வரைவில் உள்ள பிளாகரை எனது இயல்புநிலை டாஷ்போர்டாக அமைக்கவும்." என்ற செக் பாக்ஸை டிக் செய்யவும். இனிமேல் எப்போதும் போல உங்கள் www.blogger.com -ல் உள்நுழைந்தால் டாஷ்போர்ட் தமிழில் இருக்கும்.
உங்கள் பிளாக்கில் கூகிள் தமிழ் டிரான்ஸ்லேட்டர் பொதிய!
By: ஜீனோ கார்த்திக் | 8/30/2008 09:24:00 PM | blogging, கூகிள் | 8 Comment(s) »<iframe scrolling="no" frameborder="0" width="180" src="http://www.google.co.in/transliterate/indic/igoogle/Tamil" height="300"></iframe>
<br/
>
<font size="1.5px"><a href="http://tamil-software.blogspot.com" target="_blank">தமிழ் மென்பொருள்</a></font>
கூகிள் மேப் இப்போது கூகிள் மேப் மேக்கர் என்ற புது சேவையைத் தருகிறது. இதில் விக்கிமேப்பியாவைப் போல கூகிள் மேப்பில் உங்கள் தெரு பெயர், உங்கள் வீடு என்று எதை வேண்டுமானாலும் குறிக்கலாம். இது கூகிள் மேப்பின் சேவையை மேன்படுத்தவே இந்த சேவை.
http://www.google.com/mapmaker
adsforindians விளம்பர நிறுவனம் நம்பகமானதா?
By: ஜீனோ கார்த்திக் | 8/27/2008 10:12:00 PM | blogging | 2 Comment(s) »1) முதல் கேள்வி:
Hello, i am an Indian based website admin. I want to place ad in my Tamil
website having 400 page(on average) view per day. Will you permit to post your ad on
Tamil website.
In advertiser column, you have said that, pay only Re.1.
In publisher column, you said that, you will pay Rs.1.5 to 3 rs. Why this
conflict? How can you pay this amount to publishers if you dont get from
advertisers.
The rate Rs.1 is applicable for 50 clicks per day target to India only. This is to attract small advertisers to try our network. Our rates go higher depending on the daily click volume and targeting.
and even in your index.
owners who got payment from you.
CO.CC - புதிய டொமைன்- இலவசமாய் பெறுவது எப்படி?
By: ஜீனோ கார்த்திக் | 8/24/2008 10:42:00 AM | blogging, domain | 11 Comment(s) »
எனது தளத்தைப் பார்க்கவும். (http://getitfreely.co.cc). Tinyurl அளித்து வரும் url masking போல அல்லாமல், உங்களுக்குப் பிடித்த பெயரை உங்கள் பிளாக்கிற்கு வைக்கலாம். நீங்கள் புது பெயர் மாற்றினாலும், உங்கள் பழைய அட்ரஸும் வேலை செய்யும்.
இப்போ, எப்படி அமைப்பது என்று பார்ப்போம். இரு முறைகள் உள்ளன. முதலில், எளிதான, url forwarding method-ஐ பார்ப்போம். அடுத்த பதிவில், dns setting முறையைப் பார்ப்போம்.
1). CO.CC - இந்த இணையதளத்திற்குச் செல்லவும்.
2). உங்களுக்குப் பிடித்த பெயரைத் தேடவும், (check availability).
3). நீங்கள் தேர்ந்து எடுத்த பெயர் இருந்தால், "confirmation" பக்கத்திற்குச் செல்லும். அங்கு “Continue to Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.
4). படத்தில் காட்டியது போல, திரைத் திறக்கும். அங்கு “Create an New Account Now" என்பதைக் கிளிக் செய்து ஒரு புதிய அக்கவுண்ட் திறக்கவும். செட்டப் என்று வரும், அதை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் உள்ள மூன்றாவது option (url forwarding / url hiding)ஐ கிளிக் செய்து, அங்கு உங்கள் பிளாக் முகவரியைக் கொடுத்து Save செய்யவும்.
5). இப்போது, நீங்கள் புதிதாக உருவாக்கிய பெயரை அட்ரஸ் பாரில் தட்டுங்க, உங்க பிளாக் திறக்கும். நண்பர்களிடம் சொல்லும் போது, பிளாக்-பெயர்.blogspot.com என்று பெரிதாக செல்லாமல், "பெயர்.co.cc" என்று செல்லுங்கள். அவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.
அப்படியே, நீங்கள் உருவாகிய பிளாக் பெயரைப் பின்னூட்டமாக இடவும்.

வாய்ஸ் சாட்டிங் - பதிவு செய்வது பற்றி....
By: ஜீனோ கார்த்திக் | 8/24/2008 12:49:00 AM | இணையம், சார்ட்டிங், பொழுதுபோக்கு | 1 Comment(s) »குறிப்பு: பதிவு செய்யும் போது, உங்கள் குரல் பதிவு ஆக வில்லை என்றால், உங்கள் கணினியில் “டாஸ்க் பாரில்”(அட டைம் எல்லாம் இருக்குமே, அங்க தான்) இருக்கும், ”ஸ்பீக்கர்” பொத்தானை இருமுறை கிளிக் செய்தால், ”Volume Control" திறக்கும். அதில் “Input Monitor" அடியில் இருக்கும் “Mute" டிக் செய்ய பட்டுள்ளதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால், அந்த டிக்கை எடுத்து விட்டுவிட்டு, Volume Slidebar-ஐ உங்களுக்கு ஏற்றாற்போல், வைத்துக்கொள்ளவும்.
விண்டோஸில் ஒரே நொடியில் நீங்கள் தேடும் பைல்களைக் கண்டுபிடித்திட!
By: ஜீனோ கார்த்திக் | 8/20/2008 03:21:00 PM | மென்பொருள் | 3 Comment(s) »இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கே சொடுக்கவும்.
(இந்த பக்கதில் “Click here to Download" என்று இருக்கும். அதை கிளிக் செய்யவும்)
இந்த வீடியோவை பாருங்கள். இந்த மென்பொருளின் வேகம் தெரியும்.
ஒரே சொடுக்கில் Youtube இணையதளத்தில் இருந்து வீடியோ பதிவிறக்கம் செய்வது எப்படி?
By: ஜீனோ கார்த்திக் | 8/20/2008 12:50:00 PM | ஃபயர்பாக்ஸ் | 2 Comment(s) »இந்த பதிவில் எப்படி உங்கள் browser-இல் இருந்தே youtube, google video, metacafe, Indiafm, National Geographic, etc., போன்ற தளங்களில் இருந்து எளிதாக தரவிறக்கம் செய்தவது என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த add-on ஆனது Firefox browser-இல் மட்டுமே வேலை செய்யும். நீங்கள் உபயோகிப்பது IE எனில் முதலில் Firefox Browser-ஐ தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
Download Firefox
Download Firefox
பிறகு, இந்த Video download Helper பக்கத்தை திறக்கவும்.அங்கே "Add to Firefox" என்ற பச்சை நிற பொத்தானை சொடுக்கவும். Video download Helper இன்ஸ்டால் ஆகி விடும். ஒரு முறை உங்கள் browser-ஐ மூடி மறுபடியும் திறக்கவும். இப்போது youtube போன்ற இணைய தளங்களுக்கு செல்லவும். எதாவது ஒரு வீடியோ வை பார்க்கவும்.
படத்தில் காட்டியது போல பல "அட்ரஸ் பார்" அருகில் புதிதாய் ஒரு பலூன் இருக்கும். அதை க்ளிக் செய்து, உங்களுக்கு வேண்டிய பைலை Save செய்திடவும். இதை போல youtube மற்றும் பல இணையத்தளங்களின் embed செய்ய பட்ட வீடியோ, mp3, படம், ஆகியவற்றை எளிதாக பதிவிறக்கி கொள்ளலாம்.
இப்படியும் செய்யலாம்.
ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட!
By: ஜீனோ கார்த்திக் | 8/20/2008 06:00:00 AM | மல்டிமீடியா | 12 Comment(s) »முதலில், இந்த இணைய தளத்தில் இருந்து, mymp3 recorder-ஐ பதிவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவவும். (அப்படியே ஒரிரு விளம்பரத்தைச் சொடுக்கினால், நான் உருவாக்கிக் கொண்டிருக்கும், எனது பல்கலை கழக வலைதளத்திற்கு ஒரு டொமைன் நேம் வாங்குவதற்கு உதவியாக இருக்கும். )

ராகாவில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
1). இப்போது நிறுவிய மென்பொருளை இயக்கவும். படத்தில் காட்டியது போல் திரை திறக்கும். முதலில், ”Source" என்பதை கிளிக் செய்து, வலது புறத்தில் இருக்கும் “SteroMix"-ஐ கிளிக் செய்யவும்.
2). இப்போது, ராகா.காம் அல்லது உங்களுக்கு பிடித்தப் பாடல்கள் “ஒலிபரப்பும்” இணைய தளத்திற்குச் செல்லவும். உங்களுக்கு பிடித்த பாடலை ஓட விடவும். (இணைய இணைப்பு மெதுவாக இருந்தால், பாஸ் செய்து விட்டு, buffer ஆகி முடிந்தவுடன் ப்ளே செய்யுங்கள். (ராகா.காமில் இருந்து பாடல் கேட்க ரியல் ப்ளேயர் வேண்டும். முதலில் real player-ஐ உங்கள் கணினியில் நிறுவுங்கள். real player-ஐ பெற்றிட இங்கே செல்லவும்.
3). அதே நேரம், இந்த மென்பொருளில் “Record"(சிவப்பு நிற பொத்தான்) பொத்தானை அழுத்தவும். இப்போது, உங்கள் ஒலிபெருக்கியில் பாடும் பாட்டு, உங்கள் கணினியில் பதிவு ஆகிறது.
4). பாடல் முடிந்த பின், ”ஸ்டாப்” (வெள்ளை நிற பொத்தான்)-ஐ கிளிக் செய்யவும். சரிபார்த்து கொள்ள, ப்ளே செய்து பார்க்கவும்.
5). இன்னும் உங்கள் கணினியில் நிரந்தரமாக பதிவாக வில்லை. பாதுகாப்பாக, சேமித்திட “Save To Mp3" கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பான இடத்தில் சேமித்திடுங்கள். “Save to wav" என்று கொடுத்தால், அதிக கொள்ளளவு எடுக்கும்.
அவ்வளவு தான். இப்படி எந்த இணைய தளத்தில் இருந்தும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம்.
நீங்கள் இந்த உத்தியை பயன்படுத்தித் தரவிறக்கம் செய்தலில் வெற்றி(!) பெற்றால், மறக்காம கருத்து தெரிவிக்கவும். தோல்வி பெற்றாலும் சரி, கருத்து போடுங்க, சரி பண்ணிடலாம். நல்ல தமிழ்க் கவிதைகள், பட்டிமன்றம், பாடல்கள் ஒலிவடிவில் (பாட்காஸ்ட்) இருக்கும் இணைய தளம் தெரிந்தால், இங்கே அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.
ஒரே சொடுக்கில் youtube வீடியோவை தரவிறக்கம் செய்ய இத படிங்க.
ஜி-ஸ்பேஸ் - கூகிள் அளித்திடும் ஆன்லைன் நினைவகம்
By: ஜீனோ கார்த்திக் | 8/18/2008 10:41:00 PM | Firefox Addon | 1 Comment(s) »ஜி-ஸ்பேஸ் ஆனது ஃபயர்ஃபாக்ஸ் எக்ஷ்டென்சன் ஆகும். நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்பலோரர் உபயோகித்தால், முதலில் ஃபயர்ஃபாக்ஸைப் பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவவும்.

இப்போது ஜி-ஸ்பேஸை உபயோகித்து எப்படி உங்கள் கோப்புகளைப் பாதுகாப்பாக ஆன்லைனில் சேமிப்பது என்று பார்ப்போம்.
Gmail.com-ற்கு செல்லவும். உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழையவும். (ஆன்லைன் சேமிப்பிற்காக ஒரு தனி ஜிமெயில் கணக்கு துவங்குவது நல்லது.)
இப்போது ஃபயர்பாக்ஸில் “Tools--->Gspace” ஆப்சனை கிளிக் செய்யவும்.
படத்தில் காட்டியது போல ஒரு திரை திறக்கும்.
எப்படி blogger-ல் Navbar-ஐ நீக்குவது?
By: ஜீனோ கார்த்திக் | 8/18/2008 10:34:00 PM | blogging | 3 Comment(s) »1) உங்கள் blogger account-டில் login செய்யவும்.
2) Dashboard-இல் நுழைந்த பின் "Layout"-ஐ கிளிக் செய்யவும்.
3) அதில் "Edit HTML"-ஐ கிளிக் செய்யவும்.
4) அந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டதைப் போல இருக்கும்.
[CDATA[/*இந்த வரிக்கு அடுத்து கீழே கொடுக்கப்பட்ட வரிகளை சேர்த்துவிடவும்.
-----------------------------------------------
Blogger Template Style
Name: Rounders
Designer: Douglas Bowman
URL: www.stopdesign.com
Date: 27 Feb 2004
Updated by: Blogger Team
----------------------------------------------- */
#navbar-iframe {அதன் பிறகு இருக்கும் வரிகளை அப்படியே விட்டுவிடவும்.
display: none !important;
}
/* Variable definitionsஅவ்வளவு தான். படிப்படியான வழிமுறைகளை வீடியோவில் பார்க்கவும்.
====================
<Variable name="mainBgColor" description="Main Background Color"
type="color" default="#fff" value="#ffffff">
<Variable name="mainTextColor" description="Text Color" type="color"
default="#333" value="#333333">
...
Internet Explorer உபயோகித்தால் கணினிக்கு ஆபத்தா?
By: ஜீனோ கார்த்திக் | 8/18/2008 09:17:00 AM | இண்டர்நெட் | 7 Comment(s) »
ஆதாரம் & மூலம்: கூகிள் வலைப்பூ.

1) Tabbed Browsing

2) Popup Blocking - சில இணையதளங்கள் திறந்திடும் போது அதனுடன் ஒன்றிரண்டு பாப் அப் திறை தேவையில்லாமல் திறந்து தொல்லை கொடுக்கும். ஃபயர்ஃபாக்ஸ் பாப் அப் திறைகளை தனிச்சையாக தடுத்திடும்.
3) மாதம் ஒரு முறை அப்டேட் ஆகிவிடும்.
4) Easy History cleaner - ப்ரொவ்ஸிங் ஹிஸ்டரியை அழிக்க தனி மென்பொருள் தேவை இல்லை. ஃபயர்ஃபாக்ஸ் மூடிடும் போது அனைத்து ஹிஸ்டரி, குக்கீ அழியும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளலாம்.
5) Integrated Search Engine - கூகிள், யாகூ, லைவ், ஆகிய தேடு பொறிகள் ஃபயர்ஃபாக்ஸிலேயே இருக்கும்.
6) Download Manager - கோப்புகள் தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும் போது, இணையத் தொடர்பு துண்டித்துப் போனால் கூட இணைப்பு வந்தவுடன் தொடர்ந்து தரவிறக்கம் செய்யும்.
7) Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.
இன்னும் பல நன்மைகள் உள்ளன. ஒருமுறை உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள், உங்களுக்கே தெரியும் பல வித்தியாசங்கள்.

இந்த பதிப்பில் PDF / Portable Document file-ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்!
இந்த

இணையதளத்தில் இருந்து கீழே கொடுக்கப் பட்டுள்ள இரண்டு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவும்.
1) Converter
2) CutePDF Writer
இந்த software ஒரு virtual printer-ஐ install செய்கிறது. இந்த இரு software-களையும் install பண்ணிய பிறகு, Office, Paint, போன்ற எதாவது ஒரு program-ஐ திறக்கவும். நீங்கள் PDF ஆக மாற்ற விரும்பும் ஒரு Document-ஐ திறக்கவும். அல்லது அதில் தகவல்களை type செய்யவும்.
PDF உருவாகுவதற்கான வழிமுறைகள்:
"File---> Print" - என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
புதிதாய் உருவாக்கிய PDF file-ஐ எங்கு save பண்ண வேண்டும் என்று கேட்கும். File Name மற்றும், Location-ஐ select செய்யவும். அவ்வளவு தான். PDF File create ஆகிவிட்டது. Acorabat reader-ல் open செய்து சரி பார்த்து கொள்ளவும்.
இலவசமாக வெளிநாட்டிற்கும் உள்நாட்டிற்கும் தொலைபேசியில் பேசிட!
By: ஜீனோ கார்த்திக் | 8/17/2008 07:01:00 PM | 2 Comment(s) »ibibo இணைய தளம் ஆர்குட் போல ஒரு சோசியல் நெட்வொர்கிங் தளம். அதில் சேருபவர்களுக்கு இலவசமாக தொலைபேசியில் பேசிட வசதி தருகிறார்கள்.
இந்த தளத்தில் அதை பற்றிய தகவல்கள் விரிவாக உள்ளன.
http://www.getitfreely.co.cc/content/free-international-phone-call
இந்த தளத்தில் இருக்கும் ibibo லிங்கைக் கிளிக் செய்து ”sign up" செய்து இலவசமாக நண்பர்களுடன் பேசிடுங்கள்.
ஜிமெயில் / யாஹூ மெயில் ஹாக்!
By: ஜீனோ கார்த்திக் | 8/17/2008 11:17:00 AM | ஹாக்கிங் | 5 Comment(s) »உங்கள் இ-மெயிலை, 70% ஹாக் செய்வது உங்கள் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.(நாங்க செஞ்சுகிட்ட மாதிரி, பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் சில ரகசியங்கள் லீக் ஆவதற்கு வாய்ப்பு இருக்கு.) 30% மட்டுமே, ஆன்லைன் மோசடியாளர்கள் ஹாக் செய்கிறார்கள்(பண மோசடி, உங்கள் அக்கவுண்டில் இருந்து பல ‘கெட்ட மெயில்' உங்கள் மெயில் முகவரி புத்தகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்புதல், போன்ற பாதிப்புகள் இருக்கின்றன). அதனால, எல்லாவற்றிலும் கொஞ்சம் கவனமாக இருங்க.
மெயில் நுழைவு சொல்லை அறிய எந்த மென்பொருளும் இல்லை. சில இணைய தளங்களிலும், மெயில்களிலும் இப்படி பார்த்து இருக்கலாம். இந்த மெயில் முகவரிக்கு, ”நீங்கள் ஹாக் செய்ய விரும்பும் மெயில் ஐடி மற்றும் உங்கள் பாஸ்வேர்டை அனுப்புங்கள், நாங்கள் ஹாக் செய்து தருகிறோம்” என்று. உங்க பாஸ்வேர்டை எந்த காரணம் கொண்டும் தராதீர்கள். இவை உங்கள் மெயில் முகவரியை ஹாக் செய்திட நீங்களே உத்தரவு தருகிற மாதிரி.
கடைப்பிடிக்க வேண்டியவை:
1) கடவு சொல்லை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றுங்கள்.
2) “Hint Question" - கொஞ்சம் கஷ்டமாக உபயோகிக்கவும். உங்களுக்கு மட்டும் இல்ல, யார் வேண்டுமானாலும், உங்கள் மெயில் முகவரியைக் கொடுத்து விட்டு, ”Forgot My Password" என்று கிளிக் செய்தால், இந்த “Hint Question"ஐ தான் அவர்களிடமும் கேட்கும். உங்க செல்ல பேரு என்ன, உங்க அம்மா பேரு என்ன, பிறந்த ஊர் என்ன, பிடித்த நிறம்? இப்படி சில்லி தனமாக கேள்வி இருந்தா, உங்க நண்பர்கள், தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் ஒரு யூகத்தில் பதில் அளித்து ஹாக் செய்திட முடியும்.)
3) கண்டிப்பாக “Secondary Mail" உபயோகிக்கவும். ”Secondary Mail" - இருந்தால், Hint Question கேட்காது, Forgot my password கிளிக் செய்தால், உடனே ஒரு activation link உங்க மெயில் ஐடிக்கு வந்துவிடும். யாரும் ஹாக் பண்ண முயற்சி செய்தாலும் தெரிந்து விடும்.
4) குறைந்தது 4 மெயில் ஐடி வைத்துக்கொள்ளுங்கள்.
- ஒரு மெயில் ஐடி - யாருக்கும் கொடுக்கதீர்கள். ஆன்லைன் பாங்கிங் போன்ற மிகவும் முக்கியமான செயலுக்கு மட்டுமே உபயோகிக்கவும். மற்ற மூன்று மெயில் ஐடிக்கும் “Secondary mail id"- ஆக இந்த ஐடியை கொடுக்கவும். (யாருக்கும் தெரியாம ரகசியமாக வைச்சுக்கோங்க)
- இரண்டாவது மெயில் ஐடி - நண்பர்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக உபயோகிக்கலாம்.
- மூன்று - நம்பகமான தளங்கள், சோசியல் நெட்வொர்கிங் தளங்கள் (ஆர்குட், மைஸ்பேஸ்) போன்றவற்றில் சேருவதற்கு உபயோகிக்கலாம். அலுவலக பயன்பாட்டிற்காக உபயோகிக்கும் மெயில் ஐடியை சோசியல் நெட்வொர்கிங் தளங்களில் சேர்வதற்கு உபயோகிக்க வேண்டாம். (இப்படி தான் ஒரு முறை, ஆர்குட்டில் “இன்விவைட்” என்று இருந்தது, அதை கிளிக் செய்ததால், என்னை அறியாமல் என் ஆசிரியருக்கு ஆர்குட்டில் இருந்து “இன்விடேசன்” சென்று விட்டது. )
- நான்கு - இந்த முகவரியை ”குப்பை” (spam) மெயிகளுக்காக மட்டும், உபயோகிக்கவும். (அப்டினா? ஆசை யார விட்டது, பணம் சம்பாதிக்கலாம், உங்க மெயில் ஐடி தாங்க, அனுப்பி வைக்கிறோம் / இந்த தளத்தில் சேர்ந்தால் தான், இந்த தளத்தைப் பார்வை இடலாம், இதியாத்தி... இதியாத்தி..... இப்படிதெரியாத தளங்களில் எல்லாம் இந்த முகவரியை கொடுங்க. குப்பை மெயில் வந்தாலும், ஒரு பிரச்சனையும் இல்ல.
ஜிமெயில் அக்கவுன்ட் வைத்திருந்தால், அக்கவுண்ட் பக்கத்திற்கு செல்லவும். யாஹூ உபயோகிப்பளர்கள், தங்கள் மெயிலில் உள்நுழைந்த பின், மேலே ”sign out", அருகில் ”My Account" கிளிக் செய்து, தங்கள் மெயில் செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளை உபயோகிக்கும் முறையை அறிந்து கொள்ள, இந்த pdf கோப்பைத் தரவிறக்கிக் கொள்ளவும்.
இருக்கு... ஆனா... இல்ல!
By: ஜீனோ கார்த்திக் | 8/14/2008 10:45:00 AM | கணினி குசும்பு | 1 Comment(s) »கணினில சின்ன சின்ன குசும்பு செய்து உங்கள் நண்பர்களைக் குழப்புங்க! இந்த குசும்பு, உங்கள் கணினி திரையை உங்கள் நண்பர்கள் எதையும் கிளிக் செய்யா வண்ணம் ”லாக் செய்திடும்”. வீடியோவில் சொன்ன படி செய்யவும்.
பழைய நிலைக்கு மாற்ற, உங்கள் கணினியின் ”Background"-ஐ மாற்றி விட்டு, “Arrange by Icon" --> "Show Desktop Icon"-ஐ கிளிக் செய்யவும். பழைய நிலைக்கு வந்து விடும்.
எல்லா மென்பொருள் புத்தகங்களும் தமிழில் இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும். இதை மனதில் கொண்டு திரு. பாக்கியநாதன் அவர்கள் தமிழில் மென்பொருள் புத்தகங்கள் எழுதி வருகிறார். இப்போது “எளிய தமிழில் ஜாவா” என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார். இதை புத்தகமாக வெளியிட நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார். உதவ நினைக்கும் உள்ளங்கள், அவருடைய இணையபக்கத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ளவும்.
“எளிய தமிழில் ஜாவா” புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்ய, இங்கே சொடுக்கவும்.
ஆகா நூறு கோடி ரூபாய் எனக்கே எனக்கா?
By: ஜீனோ கார்த்திக் | 8/01/2008 12:07:00 AM | scam | 0 Comment(s) »"இமெயில் லாட்டரியில் நூறு கோடி டாலர் உங்களுக்கே விழுந்துள்ளது. உலகத்தில் உள்ள 600 கோடி பேரில் நீங்களே அதிஸ்டசாலி."
"நான் ஒரு பேங்க் மேனேஜர். என்னுடைய வங்கியில் கேட்பாரற்று 10 லட்சம் டாலர் உள்ளது. நீங்கள் ஒத்துழைத்தால் அந்த பணத்தை எனது பெயருக்கு மாற்றி விடுவேன். அதில் 50% உங்களுக்கு தான்"
இத்யாத்தி......இத்யாத்தி......இத்யாத்தி......இத்யாத்தி......
அவர்களுடைய முக்கிய நோக்கமே உங்களது ஆன்லைன் பேங்க் தகவல்களை பெற்று, அதை வைத்துக் கொண்டு உங்கள் பங்கில் இருந்து பணம் எடுப்பது, வாங்காத ஒரு பொருளுக்காக நமது கிரிடிட் கார்டில் பணம் எடுப்பது போன்ற மோசடிகளில் ஈடுபடுவது தான். சிலரை தங்கள் நாட்டுக்கு அழைத்து அவர்களிடம் பணம் பெற்ற பின் கொலை செய்யவும் தயங்க மாட்டர்கள்.

இதை எப்படி தடுக்க?
எதாவது ஒரு இணையத்தளத்தில் (forum) நம் மெயில் முகவரியை கொடுத்து இருப்போம். அதில் இருந்தே அவர்கள் நம் மெயில் முகவரியை பெறுகின்றனர்.
அதனால், ஒரு முக்கியமான ஒரு மெயில் முகவரியைப் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். முக்கியமான நண்பர்கள், வங்கி, அலுவலக பயன்களுக்கு அதை உபயோகிக்கவும்.
மேலும் ஒரு மெயில் முகவரியை கொண்டு ஆர்குட், forum, சாட்டிங், போன்ற இணைய தளங்களில் உபயோகிக்கவும்.
தெரியாத / நம்பிக்கை இல்லாத இணையதளங்களில் உங்கள் வீட்டு முகவரி, ஏன் உங்கள் சொந்த பெயரைக் கூட கொடுக்க வேண்டாம். இப்படி செய்தால், ஆன்லைன் மோசடி மன்னர்களின் வலையில் சிக்காமல் இருந்து தப்பிக்கலாம்.
இதையும் படிங்க!
PDF Creater
By: ஜீனோ கார்த்திக் | 7/24/2008 01:37:00 PM | cutepdf, pdf creater, virtual printer | 5 Comment(s) »இந்த பதிப்பில் PDF / Portable Document file-ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்!
இந்த

இணையதளத்தில் இருந்து கீழே கொடுக்கப் பட்டுள்ள இரண்டு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவும்.
1) Converter
2) CutePDF Writer
இந்த software ஒரு virtual printer-ஐ install செய்கிறது. இந்த இரு software-களையும் install பண்ணிய பிறகு, Office, Paint, போன்ற எதாவது ஒரு program-ஐ திறக்கவும். நீங்கள் PDF ஆக மாற்ற விரும்பும் ஒரு Document-ஐ திறக்கவும். அல்லது அதில் தகவல்களை type செய்யவும்.
PDF உருவாகுவதற்கான வழிமுறைகள்:
"File---> Print" - என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
புதிதாய் உருவாக்கிய PDF file-ஐ எங்கு save பண்ண வேண்டும் என்று கேட்கும். File Name மற்றும், Location-ஐ select செய்யவும். அவ்வளவு தான். PDF File create ஆகிவிட்டது. Acorabat reader-ல் open செய்து சரி பார்த்து கொள்ளவும்.