ஜிமெயில்
நேற்று கூகிள் ஆப்ஸ் (Google Apps) நிறுவுவதற்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றிருந்த போது, ஜிமெயில் அல்லாத வேறு மின்னஞ்சல் சேவைகளைப்  பயன்படுத்தவே ஆர்வம் காட்டினர், அவர்கள் பொதுவாக ஜிமெயில் உபயோக படுத்துவதில்லை போலும்.

காரணம் கேட்டதற்கு, ஜிமெயிலில் மின்னஞ்சல் உட்பொருள் (Subject) உடன் உள்ளடக்க செய்திகளையும் (message content) காட்டுவதால் அலுவலகத்தில் பிறர் முன்னிலையில் உபயோகிப்பது சிரமமாக உள்ளது என்றனர்.


இந்த பண்பாடு, மின்னஞ்சல்களை எளிதாகவும், விரைவாகவும் தொகுக்க உதவுகின்ற போதிலும்,  பொது இடங்களில் பயன்படுத்தும் பொழுது தனிமனித ரகசியங்கள் (privacy) பகிர்வதைத் தடுக்க முடியாமல் போய் விடுகிறது.


இந்த வசதியை ”சினிபெட்”(Snippet) என்றழைக்கின்றனர். இது ஜிமெயிலின் கூறாநிலைக் கூடுதல் வசதியே (Default Additional  Functionality) ஆகும், இதை விரும்பாதவர்கள் நீக்கிவிடலாம்.

சினிப்பெட்டை நீக்குவதற்கு, ஜிமெயில் பயனர் கணக்கில் உள்நுழைந்து, “Settings" பக்கத்திற்குச் செல்லவும்.  அதில், “General" tab-ல் Snippets-ற்கு அடியில் இருக்கும் No snippets - Show subject only.” என்பதைத் தேர்ந்தெடுத்து, “Save Changes” அழுத்தி மாற்றங்களைச் சேமிக்கவும்.

இதை வீடியோவில் பார்க்கவும்,
சுய விளம்பரம்:

கூகிள் ஆப்ஸ் - உங்கள் நிறுவன பெயரில் மின்னஞ்சல் முகவரி உருவாக்கிட உதவும்.  உங்கள் முகவரியை you@gmail.com என்பதற்குப் பதிலாக, உங்கள் நிறுவன பெயரிலயே வைத்துக்கொள்ள முடியும். அதாவது, you@your-company-name.com / you@company-name.in.  கூகிள் ஆப்ஸ் நிறுவதற்கு என்னை, 9789008755 தொடர்பு கொள்ளவும். இது வரை 25 க்கும் மேற்பட்ட அலுவலகங்களுக்கு நிறுவியுள்ளேன்.

http://www.jeno.in

இணையத்தில் அதிகமாக உலவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஃபயர்பாக்ஸ் நீட்சி  இது. (Firefox Browser add-on). 
எனக்கு மிகவும் பிடித்த பயன்பாடு - முடிவில்லா பக்கம் ("Endless Page").  நீங்கள் ஒரு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், முதல் பக்கம் படித்து முடிக்கும் முன்,  தானாகவே அடுத்த பக்கத்தைத் தரவிறக்கி வைத்திருக்கும்.  அதே போல், Google, yahoo போன்ற தேடுப்பொறிகளில் தேடிடும் பொழுதும், தானாகவே அடுத்தடுத்த பக்கங்களைத் தரவிறக்கம் செய்து தயாராக வைத்திருக்கும். 


இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்திட, https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825

“Related Article” -  சில நேரங்களில், நாம் இணைய பக்கங்களில் புதிய தகவல்களைப் படித்திடும் போது, அதைப் பற்றி மேலும் அறிய, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள விளைவோம். அதை எளிதாக்குகிறது, இந்த நீட்சி.  ஒரு வார்த்தையைத் தெரிவு (select) செய்த உடன், அதன் மேல், ஒரு பலூன் (Popup Ballon) தோன்றும், அதில் “Google Search", "Wikipedia Search", "Twitter Search" போன்ற அம்சங்கள் இருக்கும்.மேலும், வார்த்தைகளைத் தெரிவு செய்தவுடன், தானாகவே “Copy" ஆகிவிடும். (காப்பி & பேஸ்ட் பதிவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.)

மேலும், Googleலில் தேடிடும் பொழுதும், தேடும் சொல்லிற்குச் சம்பந்தப்பட்ட நிறைய பக்கங்களை ”Amazon, Twitter" போன்ற இணைய தளங்களில் இருந்து, எடுத்துத் தருகிறது. 
Awesome Toolbar” - இந்த வசதி, Google Chrome-ல் இருப்பது போல, நாம் Address bar-ல் type செய்ய ஆரம்பித்தவுடன், நாம் அடிக்கடி செல்லும் தளங்களைப் பட்டியலிடும்.


Ctrl + Space - தட்டினால் Quick launcher என்ற வசதி வருகிறது.அதிகம் பயன்படுத்தும் தளங்களை அதில் பட்டியலிட்டுக் கொண்டால், Cellphone-ல் Quick dial வசதி இருப்பது போல, ஒரே சொடுக்கில் நமக்கு விருப்பமான தளத்திற்குச் செல்லலாம்.  


நாம் பார்வையிடும் இணைய தள பக்கத்தில் உள்ள எல்லா சுட்டிகளையும், எல்லா படங்களையும் ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யும் வசதியும் இதில் உள்ளது. 

இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்ய, இங்கே செல்லவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825

CO.CC:Free Domain